தற்போதைய செய்திகள்

ஸ்டாலின் போடும் பால் நோ பால் ஆகிவிடும் – அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்…

ஸ்டாலின் போடும் பால் நோ பால் ஆகிவிடும் என்று பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். தமிழக சட்டப்பேரவையில்  திமுக உறுப்பினர் பொன்முடி பேசுகையில் எங்கள் தலைவர் ஸ்டாலின் போடும் பாலில் நீங்கள் கிளின்போல்டு ஆகி விடுவீர்கள் என்றார்.

அதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசும் போது அது நோ பாலாக ஆகி விடும் என்றார். அதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.தங்கமணி எதிர்க்கட்சி தலைவர் மைதானத்திற்குள்ளேயே வராமல் பந்து வீசிக்கொண்டிருக்கிறார். பந்து இருந்தால் தான் மைதானத்திற்குள் வர முடியும். நீங்கள் மைதானத்திற்குள்ளேயே வர முடியாது என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.