இந்தியா மற்றவை

”130 கோடி மக்கள்தான் எனது ஆதாரங்கள்” விமானப்படை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி பேச்சு…

புதுடெல்லி
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மாதம் 26-ம்தேதி இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட்டிற்கு சென்று தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் காஜியாபாத் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி பாலகோட் தாக்குதலுக்கு 130 கோடி மக்களும் என்னுடைய ஆதாரங்கள். பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.