இந்தியா மற்றவை

காந்தி உருவம் பொறித்த 150 ரூபாய் நாணயம் பிரதமர் மோடி வெளியிட்டார்

அகமதாபாத்,
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த  தினமான இன்று குஜராத் மாநிலத்தில் சபர்மதி நதிக்கரை ஓரத்தில் காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் அகமதாபாத் நகருக்கு வந்தார்.
சபர்மதி ஆசிரமத்துக்கு சென்ற மோடி, அங்கு காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மோடி, தூய்மை இந்தியா தொடர்பான விழாவில் பங்கேற்றார். குஜராத் மாநில முதல் மந்திரி விஜய் ருபானியும் பங்கேற்ற இவ்விழாவில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.