தூத்துக்குடி

2 ஜி வழக்கில் சிறை சென்றதை யாரும் மறக்கவில்லை,தூத்துக்குடி தொகுதி மக்களை கனிமொழி ஏமாற்ற முடியாது – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ பேச்சு…

தூத்துக்குடி:-

2 ஜி ஊழல் வழக்கில் சிறை சென்ற கனிமொழி தூத்துகுடி தொகுதி மக்களை ஏமாற்ற முடியாது என்று தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ கூறினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆறுமுகநேரியில் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், திருச்செந்தூர் முன்னாள் தொகுதி கழக செயலாளர் வடமலை பாண்டியன், மாவட்ட பொருலாளர் ஜெபமாலை, ஆறுமுகநேரி தொழிலதிபர் ராதாகிருஷ்ணன், நெல்லை தூத்துக்குடி பனை வெல்ல கூட்டுறவு இணைய தலைவர் தாமோதரன், நகர செயலாளர் அரசகுரு, பாலஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்று வரும் அம்மாவின் நல்லாட்சியை சிறப்பாக வழி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கேபழனிச்சாமி. துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆகியோரின். வழிகாட்டுதலின் படி செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலதிட்டங்களையும் இந்தியாவில் மக்கள் விரும்பும் நல்லாட்சி சாதனை களை மக்களிடம் எடுத்துக்கூறி 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தமிழிசை சவுந்திரராஜனை வெற்றி பெறவைப்போம்.

18, வார்டுகள் அடங்கிய. ஆறுமுகநேரியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழிக்கு வாக்குகள் கிடைக்காத வகையில் நாம் பணியாற்ற வேண்டும். 2 ஜி அலைக்கற்றை ஊழல் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளைடித்து சிறை சென்ற கனிமொழி தூத்துக்குடி மக்களை ஏமாற்றத்தான் நம் தொகுதியை தேர்ந்து எடுத்துள்ளார். ஆனால் நமது அ.தி.மு.க. பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, புதிய தமிழகம் கட்சிக் கூட்டணி வேட்பாளரான தமிழிசை சவுந்திரராஜன் . மக்களுக்கு சமூக சேவையுடன் பனியாற்றக்கூடிய டாக்டர்.

அவரை பற்றி போன்ற நல்லவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப வாக்காளர்களிடம் நம் கழகத்தினர் பிரச்சாரம் செய்ய வேண்டும். அவரை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசை சவுந்திரராஜனை வெற்றி பெற இரவு பகல் பாராது கழக பனியாற்றிட வேண்டும். வரும் 3-ம்தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நமது கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து கோவில்பட்டி. தூத்துக்குடி. ஆறுமுகநேரி. திருச்செந்தூர் உட்பட நம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றார். முதல்வருக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி சண்முகநாதன் பேசினார்.

இக்கூட்டத்தில் திருச்செந்தூர் நகர கூட்டுறவு தலைவர் கோட்டை மணிகண்டன், திருச்செந்தூர் முன்னாள் பேரூராட்சி தலைவரும், நகர செயலாளருமான மகேந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தங்கதிலகா, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணவேணி, நகர மகளிர் அணி தலைவி ஜெகஜோதி. நகர பா.ஜ.க தலைவர் தங்கபாண்டியன். ஆறுமுகநேரி முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.