தமிழகம்

2020-2021 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் : துணை முதலமைச்சர் 14-ந்தேதி தாக்கல்

சென்னை

2020-2021ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வரும் 14-ந்தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ் பேரவைத்தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை வரும் 14-ந்ேததி வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்ட உள்ளார்.

அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 181(1)-ன் கீழ், 2020-2021-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2020-2021 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை 14-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் படி வரும் 14-ந்தேதி அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.