தற்போதைய செய்திகள்

2021-ல் கழகம் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி – சிறுணியம் பி.பலராமன் திட்டவட்டம்

திருவள்ளூர்

2021-ல் கழகம் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி என்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ திட்டவட்டமாக கூறினார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூந்தமல்லி ஒன்றிய கழகம் சார்பில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா மற்றும் கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் பூந்தமல்லி ஒன்றியம் நேமம் திருவள்ளூர் சாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பூந்தமல்லி ஒன்றிய கழக செயலாளர் ஜி.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சி எப்பொழுதும் ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி. தீயசக்தி ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பகல் கனவு கண்டார். அது பலிக்காது. திருவள்ளூர் மேற்கு மாவட்டம் எப்பொழுதும் கழகத்தின் வெற்றிக்கோட்டை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறோம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியில் நடைபெறுகின்ற ஆட்சி தூய்மையான ஆட்சி. எடப்பாடியாரின் ஆட்சி.

அம்மா மறைவிற்கு பிறகு கழகத்தை அழிக்க திமுக நடத்திய நாடகங்களை தவிடுபொடி ஆக்கி முதலமைச்சர் எடப்பாடியார், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை தந்து வருகின்றனர். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியில் தொண்டர்களை அரவணைத்து கழகத்தை கட்டி காத்து வருகிறார்கள். 2021ல் அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.

பதவிவெறி பிடித்த ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைக்கவும், முதல்வர் பதவியில் அமரவும் குறுக்குவழியில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டாலின் தலைகீழாக நின்றாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் முதல்வராக முடியாது. 2006 முதல் 2011 வரை துணை முதல்வராக இருந்த முகஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார் மத்தியில் கேபினட் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழக மக்களுக்கு துரோகத்தை மட்டும் தான் தந்தார்கள்.

இலங்கைப் பிரச்சினையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு திமுக, காங்கிரஸ் காரணம். இலங்கை சென்று ராஜபக்சேவிடம் கனிமொழி பரிசுப்பொருள் பெற்றதை மறந்துவிட முடியுமா? தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் எடப்பாடியார். அம்மா பிறந்தநாளையொட்டி இந்த ஆண்டு தாய் வீட்டு சீதனம் தந்து இலவச திருமணங்களை நடத்த உள்ளோம். மக்கள் என்றுமே அ.தி.மு.க பக்கம் தான்.

இவ்வாறு சிறுணியம் பி.பலராமன் பேசினார்

இக்கூட்டத்தின் போது மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தனர்.