தமிழகம்

21 மாவட்டங்களில் 2 நாள் அனல் காற்று வீசும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

சென்னை:-

தமிழகத்தின் வட மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் உள்பட மொத்தம் 21 மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்பக் காற்று வீசும் என்றும், பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 104 டிகிரிக்கு மேல் வெப்பம் இருக்கும் எனவும், அவ்வப்போது மாலை நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பக் காற்று வீசுவதால் வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வெளியில் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் நேற்று நியாயவிலை கடையில் அரிசி வாங்க சென்ற தனலட்சுமி என்ற பெண் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வட மாநிலங்களில் குறிப்பாக பீகாரில் நேற்று ஒரே நாளில் 30 பேர் வெயிலின் தாக்கத்துக்கு பலியாகி உள்ளனர்.