தமிழகம்

4 தொகுதி இடைத் தேர்தல் : வாக்காளர்களுக்கு நடு விரலில் மை..

சென்னை:-

நான்கு தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என்று என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

வரும் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலின் போது, வழக்கமான முறையில் ஆட்காட்டி விரலில் மை வைக்கப்படும்.

இந்நிலையில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறும்போது ஏற்கனவே வைத்த மை அழியாது என்பதால் நடு விரலில் மை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.