சிறப்பு செய்திகள்

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை முதல் கழகத்தினர் விருப்பமனு அளிக்கலாம் – கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு…

சென்னை:-

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு போட்டியிட விரும்பும் கழகத்தினர் நாளை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளர்கள் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்
19.5.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
வே ட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன் பிறப் புகள், தலமைக் கழகத்தில் நாளை  ஞாயிற்றுக்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விண்ணப்பக் கட்டணத் தொகையாக 25.000/- (ரூபாய் இருபத்தைந்தாயிரம்
மட்டும்) ரூபாயை செலுத்தி, விண்ணப்பப்ப டிவங்களலை பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே (21.4.2019) வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.