இந்தியா மற்றவை

5 பேரை மிதித்து கொன்ற மதம் பிடித்த யானை – ஒடிசாவில் மக்கள் பீதி…

புவனேஸ்வர்:-

யானை மிதித்து 5 பேர் பலியானார்கள். இதில் வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தை உள்பட 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் ஆங்குல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளது.

ஒரே நாளில் அடுத்தடுத்து இப்படி 5 பேரை யானை மிதித்துக் கொன்ற சம்பவம், யானைகள் அதிகமாக நடமாடும் ஒடிசா கிராமங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து இந்த விபரீதம் நடந்துள்ளது. 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.சாந்தா கிராமம், சாந்தபடா கிராமம் ஆகிய 2 கிராமங்களிலும் உள்ள மக்கள் இந்த சம்பவத்தால் உறக்கமில்லாமல் இருக்கிறார்கள்.யானை தாக்கி 2018-19ல் 92 பேர் உயிரிழந்தார்கள்.

ஒரே ஆண்டில் அதிக அளவில் உயிர்ச்சேதம் இந்த ஆண்டில் தான். மனிதர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.