சிறப்பு செய்திகள்

56 அறிஞர்களுக்கு தமிழ் புத்தாண்டு விருது – முதலமைச்சர் தலைமை செயலகத்தில் வழங்குகிறார்…

சென்னை

தமிழுக்கும் தமிழியல் ஆய்வுக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வருகிற தமிழறிஞர்களுக்கும், கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நற்றமிழ் நாவலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், அயல் நாடுகளில் தமிழ் வளர்க்கும் சான்றோர்களுக்கும், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு வல்லுநர்களுக்கும், தமிழ்நாடு முழுமையும் மாவட்டந்தோறும் தமிழமைப்பு வைத்து தமிழ் வளர்க்கும் ஆன்றோர்களுக்கும், கணினித் தமிழில் சிறந்து விளங்கும் அறிஞர் பெருமக்களுக்கும் அவர்கள்தம் தமிழ்ப் பணியை போற்றி சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருது எனக் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை 55 விருதுகளைத் தோற்றுவித்து அறிவித்து வரலாற்று சாதனைப்படைத்தார்.

அவர்தம் சீரிய வழியில் நல்லாட்சி புரிந்து வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 2017-2018-ம் ஆண்டில் பல்வேறு நோக்கில் பல துறை சார்ந்து தமிழுக்கு உழைத்து வரும் தமிழறிஞர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரிலும் 2018-19ஆம் ஆண்டில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகளார் பெயரிலும் தமிழ்த்திரு அயோத்திதாசப்பண்டிதர் பெயரிலும் புதியதாக விருதுகளை அறிவித்தார்.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் வழங்கப்படும் விருதுகளாக தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் விருது, தமிழ்த்திரு அயோத்திதாசர் பண்டிதர் விருது அமைந்திருப்பதால் அதை விடுத்து 2018-ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும் வழங்கப்படவுள்ளது. கபிலர் விருது புலவர் மி.காசுமான், உ.வே.சா. விருது நடன. காசிநாதன், கம்பர் விருது முனைவர் க.முருகேசன், சொல்லின் செல்வர் விருது ஆவடிக்குமார், ஜி.யு.போப் விருது கு.கோ. சந்திரசேகரன் நாயர், உமறுப்புலவர் விருது பேராசிரியர் சா.நசீமாபானு, இளங்கோவடிகள் விருது சிலம்பொலி சு.செல்லப்பன், அம்மா இலக்கிய விருது முனைவர் உலகநாயகிபழனி, சிங்காரவேலர் விருது பா.வீரமணி ஆகியோருக்கும் மற்றும் 2017-ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வை.மதன்கார்க்கிக்கும் (கார்க்கி ஆராய்ச்சி அறக்கட்டளை) வழங்கப்படவுள்ளன.

மேற்கண்ட விருதுகளில் தமிழ்த்தாய் விருது பெறும் புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கு ரூபாய் 5 லட்சம் விருதுத் தொகையுடன் பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மற்ற விருதுகள் பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகையும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் பொன்னாடை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும்.

மேலும் 2018-ம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் யூமா வாசுகி, லட்சுமண ராமசாமி, அரிமா மு.சீனிவாசன், ஜி.குப்புசாமி, மருத்துவர் சே.அக்பர்கவுசர், முனைவர் ராஜலட்சுமி சீனிவாசன், செ.செந்தில் குமார் (எ) ஸ்ரீ கிரிதாரிதாஸ், முனைவர் பழனி.அரங்கசாமி, எஸ்.சங்கரநாராயணன், ச.நிலா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் விருதுத் தொகை தகுதியுரை மற்றும் பொன்னாடையும் வழங்கப்படும்.

மேலும், 2018-ம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளான இலக்கிய விருது டென்மார்க் நாட்டைச் சேர்ந்த வி.ஜீவகுமாரன், இலக்கண விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த கி.பாரதிதாசன், மொழியியல் விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த முனைவர் ச.சச்சிதானந்தம் ஆகியோருக்கும் வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகளை பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் உரூபாய் விருதுத் தொகையும் தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

மாவட்டங்களில் தமிழ்ப்பணி ஆற்றி அருந்தொண்டாற்றி வரும் 32 மாவட்டங்களின் தமிழ்ச் செம்மல் விருது பெறுவோர் திரு யு.எஸ்.எஸ்ஆர். கோ. நடராசன் (சென்னை மாவட்டம்), முனைவர் அமுதா பாலகிருஷ்ணன் (திருவள்ளூர் மாவட்டம்), முனைவர் இதயகீதம் அ.இராமானுசம் (காஞ்சிபுரம் மாவட்டம்), முனைவர் ப.சிவராஜி (வேலூர் மாவட்டம்), ஆ.கவிரிஷி மகேஷ் (கிருட்டினகிரி மாவட்டம்), க.சம்பந்தம் (திருவண்ணாமலை மாவட்டம்), செ.வ.மதிவாணன் (விழுப்புரம் மாவட்டம்), இரா.சஞ்சீவிராயர் (கடலூர் மாவட்டம்), முனைவர் பெ.ஆறுமுகம் (பெரம்பலூர் மாவட்டம்), முனைவர் அ.ஆறுமுகம் (அரியலூர் மாவட்டம்), ஆ.கணபதி (சேலம் மாவட்டம்),

பொ.பொன்னுரங்கன் (தருமபுரி மாவட்டம்), முனைவர் சி.தியாகராசன் (நாமக்கல் மாவட்டம்), வெ.திருமூர்த்தி (ஈரோடு மாவட்டம்), கவிமாமணி வெ. கருவைவேணு (கரூர் மாவட்டம்), முனைவர் மா.நடராசன் (கோயம்புத்தூர் மாவட்டம்), மு.தண்டபாணிசிவம் (திருப்பூர் மாவட்டம்), சோ.கந்தசாமி (நீலகிரி மாவட்டம்), வீ.கோவிந்தசாமி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்), மு.முத்து சீனிவாசன் (புதுக்கோட்டை மாவட்டம்), முனைவர் சே.குமரப்பன் (சிவகங்கை மாவட்டம்), த.உடையார்கோயில் குணா (தஞ்சாவூர் மாவட்டம்), கவிஞர் நா.சக்திமைந்தன் (திருவாரூர் மாவட்டம்), புலவர் மு.மணிமேகலை (நாகப்பட்டினம் மாவட்டம்), க.சுப்பையா (இராமநாதபுரம் மாவட்டம்), சு.இலக்குமணசுவாமி (மதுரை மாவட்டம்), வதிலைபிரபா (திண்டுக்கல் மாவட்டம்), சு.குப்புசாமி (தேனி மாவட்டம்), முனைவர் க.அழகர் (விருதுநகர் மாவட்டம்), கவிஞர் பே.இராசேந்திரன் (திருநெல்வேலி மாவட்டம்), ப.ஜான்கணேஷ் (தூத்துக்குடி மாவட்டம்), முனைவர் கா.ஆபத்துக்காத்தபிள்ளை (கன்னியாகுமரி மாவட்டம்).

தமிழ்ச் செம்மல் விருது பெறும் ஒவ்வொரு விருதாளர்களுக்கும் 25,000 ரூபாய் விருதுத் தொகையுடன் தகுதியுரை வழங்கியும் மற்றும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவர்.மேற்கண்ட 56 விருதுகள் முதலமைச்சர் திருக்கரங்களால் வரும் 19.02.2019 அன்று சென்னை, தலைமைச் செயலகத்தில் வழங்கப்படவுள்ளன.

கடந்த ஏழு ஆண்டுகளில் அம்மாவின் அரசு உலகத் தமிழறிஞர்களுக்கு உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 3, சிறந்த மொழி பெயர்ப்பாளர்களுக்கான விருதுகள் 10, பல்வேறு முதுபெரும் தமிழறிஞர்களின் பெயரில் அவர்தம் நடையில் தமிழ்ப் பணியாற்றும் தமிழறிஞர்களுக்கு விருதுகள் 13, மாவட்டங்கள் தோறும் தமிழ் அமைப்புகள் வைத்து தமிழ் வளர்க்கும் சான்றோர்களுக்கு விருதுகள் 32, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.