இந்தியா மற்றவை

850 இந்திய கைதிகளை விடுவிக்க சவூதி இளவரசர் உத்தரவு…

சவூதி நாட்டு சிறைகளில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்க அந்நாட்டு இளவரசர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடந்த பிரதமர் மோடி மற்றும் சவூதி இளவரசர் இடையேயான சந்திப்பின் போது சவூதியில் உள்ள இந்திய சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்று சவூதியில் உள்ள இந்தியக் கைதிகள் சுமார் 850 பேரை விடுவிக்க, அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தியாவிலிருந்து ஆண்டொன்றுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை வரம்பை, 2 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.