சிறப்பு செய்திகள்

நமது அம்மா ஆசிரியர் இல்ல திருமண விழா : முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் நேரில் வாழ்த்து…

சிவகங்கை:-

நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியரும், கழக செய்தி தொடர்பாளருமான மருது அழகுராஜ் இல்ல திருமண விழா சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்  வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியரும், கழக செய்தி தொடர்பாளருமான மருது அழகுராஜ் மகன் அ.பிரசன்னா- பா.சுபத்ரா ஆகியோரது திருமண விழா சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் குறிஞ்சி நகரில் உள்ள மணமகன் இல்லத்தில்  காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்தினர். முன்னதாக திருமண விழாவுக்கு வருகை தந்த முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்.

திருமண விழாவில் கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார். செல்லூர் கே.ராஜூ, இரா.துரைக்கண்ணு ஜி.பாஸ்கர்,. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழின் நிர்வாக மேலாளர் வி.முத்துக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழாவையொட்டி நாதஸ்வர இசைமாமணி திருவாய்மூர் டாக்டர் டி.ஆர்.பி.அருள்மொழி கார்த்திக் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும், திலகாஸ் ரெட்ரோ 2 மெட்ரோ குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இது தவிர மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

முன்னதாக திருமண விழாவுக்கு வருகை தந்தவர்களை மருது அழகுராஜ், ந.பார்த்தசாரதி- பா.கலாவதி மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் வரவேற்றனர்.