சிறப்பு செய்திகள்

தினகரன் கட்சிக்கு முன்னாள் அமைச்சர் முழுக்கு – முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்…

சென்னை:-

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததை தொடர்ந்து அக்கட்சி நாளுக்கு நாள் தேய்பிறை போல் தேய்ந்து வருகிறது. தமிழகம் முழுவதும் அக்கட்சியில் இருந்து விலகி கழகத்தில் இணைந்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்  ஒருங்கிணைப்பாளர்கள் முன் கழகத்தின் இணைந்தார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரை அவர்களது இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.டி.இன்பத்தமிழன் தனித்தனியே நேரில் சந்தித்து, தன்னைக்கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, விருதுநகர் மாவட்டச் செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சந்திரபிரபா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய, திருநெல்வேலி மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்களான திருமலைக்குமார், கே. அருணகிரி, மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுப் பொருளாளர் ருசி எம். அன்சார், பாளையங்கோட்டை பகுதி பேரவைச் செயலாளரும், 21-வது வட்டச் செயலாளருமான டி.பாலமுருகன், பகுதி பேரவைத் தலைவர் இ. மைதீன் கம்பர், பகுதி எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் உலகநாதன், செயலாளர் நடராஜன்,

பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் டி.கருணாகரன், பகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் கருணாகரன், பகுதி சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் மின்னல் எம்.ஜாகிர் உசேன், பகுதி பொறியாளர் அணிச் செயலாளர் எம். சாகுல்சமீது பாதுஷா, பகுதி பாசறை இணைச் செயலாளர் எம். சசிக்குமார், வட்டச் செயலாளர்களான, 13-வது வட்டம் எஸ். மகாதேவன், 14-வது வட்டம் பூக்கடை சப்பாணிமுத்து, 15-வது வட்டம் பால் ஸ்டீபன், 16-வது வட்டம் வேங்கை வின்செண்ட், 32-வது வட்டம் நேசம் ரப்பாணி, 33-வது வட்டம் எம்.எம். அஜிஸ், 36-வது வட்டம் எஸ்.கே.எம். புகாரி, 51-வது வட்டம் எம். சேக்மன்சூர், 15-வது வட்டப் பொருளாளர் கே. கணேஷ்;

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பி.எஸ்.அருள்ராஜ், மாவட்ட நெசவாளர் அணிச் செயலாளர் பி.எல்.சி. பாலசுப்ரமணியன், இணைச் செயலாளர் கே. வெள்ளத்துரை, மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் பொன். முத்துவேல்சாமி, இணைச் செயலாளர் எம். ஜீவானந்தம், வாசுதேவநல்லூர் ஒன்றிய அவைத் தலைவர் ஏவி.ராமசுப்புராஜா, வழக்கறிஞர் ஏ.பாலநாதன், கீழப்பாவூர் ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் என். முத்துராஜ்,

பெத்தநாடார்பட்டி ஊராட்சி செயலாளர் எஸ். மதனதுரை, ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை அண்ணா தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வின் போது, மகளிர் அணிச் செயலாளர் விஜிலா சத்தியானந்த், எம்.பி., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை என். கணேசராஜா, மாவட்ட முன்னாள் செயலாளர் பாப்புலர் வி. முத்தையா மற்றும் சின்னதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிய, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.டி. இன்பத்தமிழன் நேரில் சந்தித்து, தன்னைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வின் போது, விருதுநகர் மாவட்டச் செயலாளரும், பால்வளத் துறை அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் எம்.எல்.ஏ. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சந்திரபிரபா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இன்பத்தமிழன் பேட்டி

 கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அ.ம.மு.க. கட்சியின் தலைவரான தினகரன் குட்டி ஜமின்தார் போல் செயல்படுகிறார். யாரையும் மதிப்பதில்லை. சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறார். அவரது கட்சி இனிமேல் உருப்படாது. உருப்படாத கட்சியில் இருந்து வீணாப் போக வேண்டாம் என்று கருதி தான் தாய்க் கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தேன். அதைத்தொடர்ந்து முதலமைச்சரையும், துணைமுதலமைச்சரையும் சந்தித்து இருவர் முன்னிலையில் தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டேன்.

இனி ஒருங்கிணைப்பாளர்கள் கட்டளையை ஏற்று கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். என்னை தொடர்ந்து மேலும் பல முக்கிய பிரமுகர்களும், அ.ம.மு.க. கட்சியின் பொறுப்பாளர்களும் தாய்க் கழகத்தில் இணைய இருக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மா காலத்தில் தினகரன் எப்படி தனிமரமாக இருந்தாரோ அதே போல் இன்னும் ஒரு சில மாதங்களில் அவர் தனிமரமாகி விடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.