தற்போதைய செய்திகள்

கழக அரசின் அரசாணை…

அரசகட்டளை:-

மன்னர்களின் ஆளுமையில் தமிழ்மண் இருந்த காலத்தில் நிர்வாகத்தின் தலைமை வாரிசு வழியே வந்தது. மன்னரின் வாரிசுகளே தலைமை பட்டத்திற்கு அடுத்தடுத்து வருவார்கள். அரசருக்கு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை உருவாக்கப்பட்டது. மக்களுக்கான திட்டத்தை அரசர் கட்டளையாக உத்தரவிடுவார். அந்த அரசகட்டளையை கட்டாயம் மக்கள் பின்பற்றியே தீர வேண்டும்.

மன்னர் இடும் கட்டளையை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இனக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்களின் பணியே மன்னரின் செய்தியை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமே.பல மன்னர்களின் சிந்தனையில் உதித்த மட்டகரமான சிந்தனை கூட அரச கடடளையாக அறிவிக்கப்படும். எவ்வளவு பெரிய பாதிப்பு வந்தாலும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய இக்கட்டான நிலையும் இருந்துள்ளது.

தமிழ் மண்ணை பிற மொழி மன்னர்களும் கைப்பற்றி தங்களின் ஆதிக்கத்திற்கு கீ்ழே கொண்டு வந்துள்ளனர். அவர்கள் இட்ட அரசகட்டளைகளும் அமலுக்கு வந்தன.

ஆங்கில ஆதிக்கத்திற்கு கீழ் அடிமைப்பட்ட போதும் அவர்கள் போடும் சட்டமே அமலுக்கு வந்தது. பல்வேறு காலகட்டங்கள் கடந்து மக்களாட்சி மலர்ந்தது.

அரசாணை

1947-ல் சுதந்திரம் கிடைத்தபிறகு 50-ல் குடியரசாக மாறி முதல் பொதுத்தேர்தலை பாரத தேசம் சந்தித்தது. மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நாடாளுமன்றமும், சட்டமன்றமும் நடத்தப்பட்டு வருகிறது.

மக்களில் இருந்தே அதிகாரபீடம் அமைக்கப்பட்ட பிறகு பல மாற்றங்கள் மிகப்பெரிய பரிணாமங்களை அடைந்தன. பல அரசாணைகள் மிகப்பெரிய வரலாற்று மாற்றங்களை உருவாக்கின.

1967-ல் அண்ணா அரியணை ஏறியபோது சென்னை மாகாணமாக இருந்தை தமிழ்நாடு என்று ஒரே அரசாணையில் வரலாற்று மாற்றத்தை பதிவு செய்தார்.

அரசிதழ் 

அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணையாக அறிவித்தாலும் அரசிதழில் (கெஜட் நோட்டிபிகேசன்) வெளியிட்டால் மட்டுமே நடைமுறைக்கு வரும். பல நூறு அரசாணைகள் அரசிதழில் வெளியிடாமல் மவுனமான நிகழ்வுகளும் நடந்துள்ளன.

அதனால் தான் காவேரி ஆணையம் பற்றி அரசாணையை அரசிதழில் வெளியிட புரட்சித்தலைவி எவ்வளவு அளப்பரிய முன்னெடுப்புகளை செய்து வென்று காட்டினார் என்பதை சமகால தலைமுறை நன்கு அறியும்.

ஆக, அரசாணை என்பது மாற்றத்தை உருவாக்கும் மகத்தான வார்த்தை. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை கூடி கொள்கை முடிவெடுத்தோ, துறை சார்ந்து முடிவெடுத்தோ அறிவிக்கப்படும் அரசாணையில் கையொப்பம் இடுபவர் அரசு அதிகாரியே. அதனை அரசிதழில் வெளியிட்ட பிறகும் முழுமையாக அமலுக்கு கொண்டு வருவதில் அரசு அலுவலர்களின் பணி அடிப்படையானவை.

புரட்சித்தலைவர்- புரட்சித்தலைவி மக்களின் மனதில் ஆழத்தை அறிந்து அதன்படியே ஆட்சி செய்தவர்கள் பொன்மனச் செம்மலும், தங்கத் தாரகையும் ஆவார்கள்.

பசியோடு போராடியே இளமைக் காலத்தை கழித்ததால் தான் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார் சரித்திர நாயகன்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்து, தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டதால் தான் குழந்தைகளுக்கு தாயின் முதல் எழுத்து இன்சியலாக பயன்படுத்தலாம் என்றும், தொட்டில் குழந்தை திட்டம் எனும் புனித திட்டத்தையும் கொண்டு வந்தார் புரட்சித்தலைவி.

இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட அரசாணைகளை கழக அரசு ஆணையிட்டு செயல்படுத்தி உள்ளது.

ஒருதுளி மையில் தலைமுறை மாற்றத்தையே தமிழ் மண்ணிற்கு கொண்டு வந்தது தன்னிகரில்லா கழக அரசு.

ஏழை,எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய முன்னேற்றத்திற்கு கழக அரசின் அரசாணைகள் ஏணியாக இருந்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவே முடியாது.

மக்களிடையே மாபெரும் மாற்றத்தை கொண்டு வந்த கழக அரசின் அரசாணைகள் பற்றியும், அதனை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட தடைகளையும், அதனையும் தாண்டி நிறைவேற்றியதையும், அதனால் அடைந்த மாற்றத்தையும், நன்மைகளை பற்றியும் தொடர்ந்து பார்ப்போம்.

‘‘வயிற்றில் இல்லாதபோது செவிக்குள் நுழையுமோ கல்வி’’ என்று அனுபவத்தால் உணர்ந்த பொன்மனச் செம்மல் சத்துணவு திட்டம் கொண்டு வந்தபோது தீய சக்திகள் செய்த செயல்கள், ஏற்படுத்திய தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி அரசாணையை அமலுக்கு ெகாண்டு வந்த மக்கள் திலகத்தின் மகோன்னத செயலை வியாழக்கிழமை விரிவாக பார்ப்போம்.

–  ஜோதிமுருகன்