தற்போதைய செய்திகள்

மதுரை தோப்பூரில் ஆய்வு நடத்த எய்ம்ஸ் குழு 10-ந்தேதி வருகை – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்…

சென்னை:-

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள எய்ம்ஸ் ஆய்வுக்குழு 10-ந்தேதி வர இருப்பதாக அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மாநில அரசு நிலம் வழங்கவில்லை என்று வதந்தி பரவியது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மறுத்துள்ளார். தோப்பூரில் சுகாதாரத்துறைக்கு சொந்தமான 220 ஏக்கர் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதில் மாற்றமும் இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட எந்த தடங்கலும் இல்லை. வரும் 10 மற்றும் 15-ந்தேதி எய்ம்ஸ் குழு மதுரை தோப்பூருக்கு வருகிறது. அந்த இடத்தில் எய்ம்ஸ் மையம் அமைப்பது தொடர்பாக தீவிர ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.