தமிழகம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

சென்னை

கொரோனா வைரஸ் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் சண்முகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வைரஸை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தது.அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைச் செயலர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆய்வு கூட்டங்கள்

அரசு மருத்துவர்களும் தனியார் மருத்துவர்களும் கொரண வைரைஸ் தொடர்பாக ஆய்வு கூட்டங்களை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.கொரனா வைரஸ் தீவிரம், அதை தடுக்கு வழிமுறைகள், அவசர ஊர்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தனி வார்டுகள்

மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரணா வைரஸ் சிகிச்சைக்கு என்று தனியாக வார்டு ஏற்படுத்த வேண்டும்.கொரனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதை தடுக்க நோயாளிகள் முதல் மருத்துவ பணியாளர்கள் வரை கைகளை அடிக்கடி கழுவுவதை உறுதி படுத்த வேண்டும். அதற்கு தேவையான கிருமிநாசினி மருந்துகள் கையிருப்பில் இருக்க வேண்டும்.

மாவட்ட அளவில் குழு

மாவட்ட அளவில் ஒருங்கினைப்பு குழுவை ஏற்படுத்தி அந்த குழுவில் உள்ளாட்சி அமைப்புகள், கல்வி அதிகாரிகள், காவல்துறை, வருவாய் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை இடம்டபெறச் செய்து கொரணா குறித்து விழிப்புணர்வுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.சுற்றுப்புற சூழலை துாய்மையாக வைத்துக்கொள்வதை இந்த குழுவின் மூலம் உறுதிபடுத்த வேண்டும்.மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், திரையரங்குகள், வனிக வளாகங்கள் பேன்ற இடங்களில் துண்டு பிரசுர்வங்கள் மூலம் கொரணா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கையிருப்பில் கிரிமிநாசினி

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைகளை நன்றாக கழுவ கிரிமிநாசினி திரவங்களை வைத்திருக்க வேண்டும்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கிராமங்களில் ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் நாள்தோறும் அதை கண்கானிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.