தற்போதைய செய்திகள்

தி.மு.க.வினரை போல நாங்கள் பதவிவெறி பிடித்தவர்கள் அல்ல – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி…

சென்னை

தி.மு.க.வினரை போல நாங்கள் பதவிவெறி பிடித்தவர்கள் அல்ல என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

தே.மு.தி.க. சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்பு வாரிய தலைவர் அன்வர் ராஜா எம்.பி., தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத், தமிழ்மாநில காங்கிரஸ் பொருளாளர் கோவை தங்கம், பாமக சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், பாமக மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.ஜெ.பாண்டியன், மற்றும் கழக அவைத்தலைவர்டாக்டர்.வி.இளங்கோவன், கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், முன்னாள் எம்.எல்.ஏ. ப.பார்த்தசாரதி, எ.எஸ்.அக்பர், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை பொருளாளர் எஸ்.முஜிபூர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-

“முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இதில் பங்கு பெறுவதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு நிகழ்ச்சியில் இருந்ததால் என்னை அனுப்பி வைத்திருக்கிறார். தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமியர்களை கவுரவப்படுத்துவது அ.தி.மு.க.வும், தே.மு.தி.மு.க. வும் தான். விஜயகாந்த் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது சிறப்பாக பணியாற்றினார். நான் பேரவை தலைவராக பணியாற்றிய போது எனக்கு முழு ஆதரவை கந்தார். சட்டசபையில் நாங்கள் ஒற்றுமையாக இருந்ததை பார்த்து கண் திருஷ்டி பட்டுவிட்டதோ, என்னவோ?.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முடிவில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு அழைப்பு விடுத்தால் மத்திய அமைச்சரவையில் பங்கெடுப்பது தொடர்பாக கட்சி தலைமை முடிவு செய்யும். மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கூறிய தி.மு.க.வே இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. தி.மு.க.வை போல் நாங்கள் பதவி வெறி பிடித்தவர்கள் கிடையாது. அண்ணா தி.மு.க. அரசு தொடர்ந்து மக்களுக்கு சிறப்பான சேவையை செய்யும். 2021ம் ஆண்டு பலமான அணியுடன் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.