சிறப்பு செய்திகள்

கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை…

சென்னை:-

சட்டமன்ற பேரவையில் மானிய கோரிக்கையின் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் கழக ஒருங்கிணைப்பாளர்கள்  ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக்கழகத்தில்  காலை கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெறவுள்ள மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத்தலைவர் டாக்டர் பொள்ளாச்சி ஏ.ஜெயராமன் வரவேற்புரை ஆற்றினார். அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் நன்றியுரையும் ஆற்றினார்.