சிறப்பு செய்திகள்

தமிழர்களின் அன்பும், உபசரிக்கும் தனித்து நிற்கின்றன- பிரதமர் பாராட்டு

மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் முறைசாரா உச்சி மாநாட்டை நடத்துவதற்கு உற்ற துணையாக இருந்து சிறப்பாக ஏற்பாடுகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மாமல்லபுரத்தில் கடந்த 11, 12 ஆகிய இரு நாட்களிலும் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைசாரா பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்காக 11-ந்தேதி காலை தனி விமானத்தில் சென்னை வந்தடைந்த சீன அதிபருக்கு விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருந்தது. விமான நிலையத்திற்குள்ளேயே பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், நாட்டிய நிகழ்ச்சிகளும், மங்கள வாத்தியத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை ரசித்து பார்த்த சீன அதிபர் வெகுவாக பாராட்டினார்.

அதேபோல் விமான நிலையத்திற்கு வெளியே இந்திய சீன கொடிகளுடன் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் சீன அதிபரை வரவேற்று கோஷமிட்டதை பார்த்து மனம் நெகிழ்ந்த ஜின் பிங் வழிநெடுக பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்து பிரமிப்படைந்தார். அன்று மாலை கிண்டி நட்சத்திர ஓட்டலில் இருந்து மாமல்லபுரம் வரை அவர் காரில் பயணம் செய்தபோது 34 இடங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் வழிநெடுக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தான் செய்திருந்தது. அது மட்டுமல்ல ஒரு வாரத்துக்குள் மாமல்லபுரமே விழாக்கோலம் பூணும் அளவுக்கு மிக சிறப்பாக ஏற்பாடுகளை அரசு செய்திருந்தது. ஒளி வெள்ளத்தில் மிதக்கும் மாமல்லபுரத்தை பார்த்து பிரதமரும், சீன அதிபரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

அன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலா சேத்ராவின் நாட்டிய நிகழ்ச்சியை சீன அதிபரும், பிரதமரும் கைதட்டி ரசித்தது அனைவரையும் கவர்ந்தது. அதேபோல் பிரதமரும், சீன அதிபரும் நேற்று கோவளத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் அங்கு பல்வேறு கைவினை பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களின் கைவண்ணத்தை பார்த்து சீன அதிபர் வியப்பில் ஆழ்ந்தார்.

சீன அதிபரின் உருவம் பொறித்த சிறுமுகை பட்டாடையை பிரதமர் வழங்கியபோது அவர் மெய்சிலிர்த்து போனார். இந்த ஏற்பாடுகளை எல்லாம் வெளியே தெரியாமல் தமிழக அரசு மிக சிறப்பான முறையில் செய்திருந்தது பிரதமரை வெகுவாக கவர்ந்தது. அதனால் அவர் மனம் நெகிழ்ந்து தமிழக அரசின் செயல் திறனை வெகுவாக பாராட்டினார். அதற்காக அவர் தமிழக அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்து கொண்டார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்பு நடத்துவதில் உறுதுணையாக இருந்து சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்து மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக்ெ காள்கிறேன். எப்போதும் போல் அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்ததமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும், மற்றவர்களுக்கும் எனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.