தற்போதைய செய்திகள்

2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் 100 சதவீத வெற்றிபெற பாடுபடுவோம் – கழக மாணவர் அணி சபதம்

சென்னை

2021-ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் 100 சதவீதம் முழுமையான வெற்றியைப் பெற்று புதிய வரலாற்றுச் சரித்திரம் படைத்திட தமிழ் நாடெங்கும் சிறப்பான முறையில் இரவு, பகல் பாராமல் களப்பணியாற்றுவது என கழக மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து கழக மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு கழக மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமை தாங்கினார். கழக மாணவர் அணி துணைச் செயலாளர்கள் டாக்டர் சோலை இரா.கண்ணன், எம்.டி.பாபு, கோவிலம்பாக்கம் சி.மணிமாறன், கழக மாணவர் அணி இணைச் செயலாளர் பி.குமார், கழக மாணவர் அணி துணைச்செயலாளர் வி.எம்.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எஸ்.டி.பிரசாத், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் எம்.டி. மைக்கேல்ராஜ், சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் என்.தமிழ்மணி, திருநெல்வேலி மாநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஏ. மகாராஜேந்திரன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான சி.பொன்னையன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக செய்தித்தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல், கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன், கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் டி.சிவராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- 

தனது அயராத உழைப்பினாலும், நிர்வாகத் திறமையினாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து, “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து தமிழக மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தனது முழு மூச்சாகக் கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் அருந்தொண்டாற்றி மக்கள் சேவையில் மகத்தான சாதனை படைத்திட்டவரும், உலகத் தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாகவும்,

இந்த உலகத்தில் ஈடு இணையற்ற தலைவராகவும், உலகம் வியக்கின்ற வகையில் கழகத்தை வளர்த்து 6-வது முறையாக முதலமைச்சராக ஆட்சி நடத்தி மறைந்தும், மறையாமல் என்றும் தமிழக மக்களின் இதயங்களில் மங்காப் புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கும், “மாணவச் சமுதாயத்தின் அட்சயப் பாத்திரம்”, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் தினத்தில் அன்னதானம், ரத்ததானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், கவிதை, கட்டுரைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் முதலானவற்றை, கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் வழிகாட்டுதல்படி புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளை “மாணவச் சமுதாயத்தின் எழுச்சி நாளாக” தமிழகமெங்கும் சிறப்பாகக் கொண்டாடுவது.

தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ் நாட்டின் மேம்பாட்டை கவனத்தில் இருத்தியும், எண்ணிலடங்கா முன்னோடித் திட்டங்களையும், முன்னேற்றத் திட்டங்களையும் செயல்படுத்தியவர் மறைந்த முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். “எந்தவொரு மாணவ, மாணவியும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது” என்ற தொலைநோக்கு சிந்தனையுடைய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்படும் கழக அரசு, அனைத்து ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி பயின்றிடவும்,

உயர்கல்விக்கு ரூ. 4,584 கோடி மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 28,757 கோடி இதுவரை நிதி ஒதுக்கீடு செய்து கல்வியில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து, உயர்கல்வி சேர்க்கை விகிதம் 49.8ரூ பெற்று, இந்தியாவில் தமிழகம் கல்வித் துறையில் முதன்மை பெற்று விளங்கும் வகையில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டு வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சருக்கும், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சருக்கும் கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவு பெறவும், தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெறவும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தியவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். கழக அரசு, தைவான் நாட்டின் பெரிய தொழில் நிறுவனமான பென்டாய் குரூப் தமிழகத்தில் தொழிற்சாலை அமைப்பதற்கு கழக அரசு வழிவகை செய்துள்ளது. இதன்மூலம் சுமார் ரூ. 4,000 கோடி முதல் ரூ. 7,000 கோடி வரை முதலீடும்,

தொடக்கத்தில் 25 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும், 50 ஆயிரம் பேருக்கும் நேரடி வோலை வாய்ப்புகள் பெறவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற்றத்திற்கு வித்திட்ட கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் தமிழகத்தின் வளர்ச்சியாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்பதையும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தியவர் நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த பாதையில் உறுதியாக நடக்கும் கழக அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதோடு கல்வி,

சுகாதாரம், கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு, தொழிலாளர் நலம், வேளாண்மை உற்பத்தித் திறன், போக்குவரத்து, உணவு பொருள் வழங்குள், மாற்றுத் திறனாளிகள் நலன், பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு சிறப்பு திட்டங்களை திறம்பட வகுத்து இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக முதன்மை மாநிலமாக திகழ சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய காங்கிரஸ் அரசில் 16 ஆண்டுகள் பங்குகொண்டு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக செயல்பட்டு, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜீவாதார உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து, தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு ஊழல்கள், அதிகார முறைகேடுகள்,

நில அபகரிப்புகள் முதலானவற்றின் உண்மைகளையும் பங்கீட்டு கொடுத்து குடும்ப வாரிசு அரசியலுக்காகவே கட்சி நடத்தி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகின்ற தி.மு.க-வும், அதன் தலைவர் ஸ்டாலினும் பொய் அறிக்கைகள் மூலம் கட்சி நடத்திவிடலாம் என்றும், மக்களை ஏமாற்றிவிடலாம் என்றும், பொதுமக்களை நம்ப வைத்துவிடலாம் என தினந்தோறும் பொய்யான வெற்றி அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும், காங்கிரசையும் கழக மாணவர் அணி வன்மையாக கண்டித்து தீர்மானிக்கிறது.

தமிழக மக்களின் மேன்மைகளையும், வளர்ச்சியையும் மட்டுமே தன் வாழ்வின் ஒரே இலக்காகக் கொண்டு செயலாற்றி, மாணவ சமுதாயத்தின் அட்சயப் பாத்திரமாகத் திகழ்ந்து, மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் கழக அரசு தெற்காசியாவே வியக்கும் வகையில், இந்தியாவின் எந்தவொரு மாநில அரசும் செய்திடாத திட்டங்களை நித்தம் – நித்தம் சிந்தித்து விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், நெசவாளர்கள் மனநிறைவு பெறவும், ஏழை, எளிய மக்கள் வாழ்வின் வசந்தத்தை ஏற்படுத்தவும், இளைஞர்கள், மாணவ – மாணவிகள் கல்வியில் சிறப்பு பெற்று விளங்கவும், தமிழக மக்களின் மேன்மை,

வளர்ச்சி பெறவும் பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் சிறப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி, தமிழகத்தை அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்து, “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற உயர்ந்த சிந்தனையோடு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வருகின்ற கழக ஒருங்கிணைப்பாளர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பட்டித்தொட்டியெங்கும் பள்ளி, கல்லூரிகள் தோறும் சாதனை விளக்க பிரச்சாரத்தினை தொடர்ந்து மேற்கொள்வதோடு, நடைபெற இருக்கின்ற 2021-ல் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் 100 சதவீதம் முழுமையான வெற்றியைப் பெற்று புதிய வரலாற்றுச் சரித்திரம் படைத்திட தமிழ் நாடெங்கும் சிறப்பான முறையில் இரவு, பகல் பாராமல் களப்பணியாற்றுவது என கழக மாணவர் அணி சூளுரை ஏற்கின்றது.

தமிழ்நாட்டின் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து தமிழக மக்களின் மேன்மையையும், வளர்ச்சியையும் மட்டுமே ஒரே குறிக்கோளாக தன் வாழ்வின் இலக்குகளாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவி அம்மா நல்லாசியோடு, கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தலைமையிலான கழக அரசு செய்துள்ள சரித்திர சாதனைகளாக தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தியது, தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான கச்சத்தீவை மீட்பதற்கு நீதிமன்றத்தின் மூலம் உரிமையினை நிலைநாட்டவும்,

சரித்திர சாதனைத் திட்டங்களான விலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை, அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண அம்மா திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், குழந்தைகள் நலன் காக்கும் வகையில் 16 வகையான அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப் பரிசு, தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, நோட்டு புத்தகம், பாட புத்தகம், சீருடை, காலணிகள்,

கல்வி உதவித் தொகைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், மானிய விலையில் மகளிர் இரு சக்கர மோட்டார் வாகனம் வழங்கும் திட்டம் என இந்தியாவில் எந்தவொரு மாநில அரசும் செய்திடாத பல்வேறு திட்டங்களை சிறப்புற செயல்படுத்தி, தமிழகத்தை முன்னோடி மாநிலமாக வழிநடத்தி வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் வழியில் நடைபெற இருக்கின்ற நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கழகம் 100 சதவீதம் வெற்றிபெற்று சரித்திர சாதனை படைக்க அயராது கழக பணியாற்றுவது என கழக மாணவர் அணி உறுதி ஏற்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் வேலூர் மேற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் வி.ஏ.பிரகாஷ் நன்றி கூறினார்.