தற்போதைய செய்திகள்

விருகம்பாக்கம் 137-வது வட்ட அமமுகவினர் கூண்டோடு விலகி கழகத்தில் இணைந்தனர்

சென்னை

சென்னை விருகம்பாக்கம் தொகுதி 137-வது வட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகி தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ.வை சந்தித்து கழகத்தில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட கழக செயலாளர், நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலும், 2021 சட்டமன்ற தேர்தலிலும் நாம் அனைவரும் கடுமையாக உழைத்து வெற்றிக்கனியை பறித்து அம்மா அவர்களின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் மக்கள் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக ெசயல்பட்டு நற்பெயர் எடுக்க வேண்டும். அப்படி நீங்கள் ஒவ்வொருவரும் செயல்பட்டால் புரட்சித்தலைவி அம்மா சொன்னதுபோல் 100 ஆண்டுகள் ஆனாலும் கழகமே ஆட்சியில் இருக்கும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 137-வது தெற்கு வட்ட கழக நிர்வாகிகள் சி.பழனி, ஏ.எம்.காமராஜ், முனிரத்தினம், செல்வமணி, கலைச்செல்வன், அருண்குமார், கிருஷ்ணவேல், கண்ணகி, வீணா, முத்து, பாலாம்பாள், பேபி முத்துகிருஷ்ணன், பரமேஸ்வரி, ஸ்ரீதர், முருகன், ராஜா, வெங்கடேஷ், அமுல்ராஜ், பாஸ்கர், சங்கர், சிவா, கோவிந்தராஜ், கங்காதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.