சிறப்பு செய்திகள்

மக்கள்தான் எஜமானர்கள் நல்ல தீர்ப்பு வழங்குங்கள் – துணை முதலமைச்சர் வேண்டுகோள்

திருநெல்வேலி

மக்கள் தான் எஜமானார்கள், எனவே நல்ல தீர்ப்பு வழங்குங்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 17.10.2019 அன்று திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஒன்றியம், நடுவக்குறிச்சியில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை

நடைபெற இருக்கின்ற நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், கழகத்தின் வெற்றி வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் அம்மா அவர்களின் நல்லாசி பெற்ற வெற்றி வேட்பாளராக இந்த பகுதியில் போட்டியிடுகிறார். நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காள பெருமக்களாகிய நீங்கள் தான் எஜமானர்கள், நீங்கள் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கக்கூடிய நீதிபதிகளாக நீங்கள் இருந்துக் கொண்டிருக்கிறீர்கள், ஏனென்று சொன்னால், இதற்கு முன்னால் தமிழகத்தை, காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது, திமுக ஆட்சி செய்திருக்கிறது,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாட்சி தந்திருக்கிறார். புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நல்லாட்சி தந்திருக்கிறார்.இதய தெய்வம் அம்மா அவர்கள் தமிழகத்தினுடைய பொறுப்பேற்ற காலத்திலிருந்து நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அரிப்பணித்த திட்டங்களாக, அந்த திட்டங்கள் நல்ல பல திட்டங்களாக, அந்த திட்டங்கள் தொலைநோக்கு திட்டங்களாக, தொலைநோக்கு திட்டங்கள் என்று சொன்னால் வாழ்கின்ற மக்களுக்கு 50, 100 ஆண்டுகளுக்கு பின்னாலே நமது வருங்கால சந்ததியினர் அதனின் முழு பலனைப் பெற வேண்டும் என்று அம்மா அவர்கள் பார்த்து பார்த்து பார்த்து, ஒரு மனிதனுக்கு தேவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் அவசியம் என்பதை அறிந்து உண்ண உணவாக மாதம் 20 கிலோ அரிசி விலையில்லாத அரிசியாக மாதந்தோறும் 2 கோடி குடும்பத்திற்கு முழு உணவு பாதுகாப்பினை வழங்கியிருக்கிறார். வறட்சி வந்தாலும், வெள்ளம் வந்தாலும், ஏன் சுனாமியே வந்தாலும் 20 கிலோ அரிசி வீடு தேடி வரும் சூழலை அம்மா அவர்கள் உருவாக்கி தந்திருக்கிறார்.

தமிழகத்தில் வாழுகின்ற ஏழை, எளிய மக்களுக்கு, ஒரு குருவிக்கு கூட வீடு இருக்கிறதே, இங்கு வாழுகின்ற மனிதர்களுக்கு வீடு இல்லையே என்று ஏக்கம் இருக்கக் கூடாது என்று எண்ணி அம்மா அவர்கள், குடிசைப் பகுதியில் வாழுகின்ற மக்களுக்கு, 2013-ல் தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணத்தை நாட்டு மக்களுக்கு பிரகடனப்படுத்தினார். 15 லட்சம் கோடி அளவிற்கு நிதியை திரட்டி மக்களின் அடிப்படை பிரச்சினைகளை, மக்களுடைய பொருளாதார நிலையை, தனி மனிதனுடைய வருமானத்தை உயர்த்த நல்லபல திட்டங்களை அம்மா அவர்கள் பிரகடனப்படுத்தினார்.

அதில் ஒரு பகுதியாகதான் 75 ஆயிரம் கோடி நிதியை திரட்டி தமிழகத்தில் வாழுகின்ற குடிசையில் இருக்கும் மக்களுக்கு மாற்றாக உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு இதுவரை தமிழகத்தில் கிட்டதட்ட 15 லட்சம் குடிசையில் வாழும் மக்களுக்கு வாழ்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டு, இதுவரை 6 லட்சம் மக்களுக்கு குடிசைக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகளாக, பசுமை வீடுகளாக, அடுக்குமாடி வீடுகளாக, தாமாக வீடுகட்டும் திட்டத்தின் மூலமாக ஆக 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2023-ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் இருக்கின்ற அத்தனை ஏழை, எளிய மக்களுக்கு உறுதியாக, தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்பதனை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

40 வருடங்களில் தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5 ஆயிரம். ஆனால், அம்மா அவர்களின் ஆட்சியின் 8 ஆண்டு காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சாதனையாக மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். இதிலிருந்து, யார் ஆட்சி மக்கள் நல திட்டங்களை வழங்கினார்கள் என்று நாமெல்லாம் அறிவோம்.

அம்மா அவர்களை பொறுத்தவரையில் பெண்கள் நாட்டின் கண்கள் என்று எண்ணினார்கள், பெண்களுடைய முன்னேற்றம் பெற வேண்டுமென்றும், சமூகத்தில் நல்ல மரியாதையுடன் வாழவேண்டும் என்று 2 பெண் குழந்தைகள் பிறந்தால், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25 ஆயிரம், பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50 ஆயிரம், தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார்.

மீண்டும் தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் அம்மா அவர்களின் ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி தருவேன் என்று அறிவித்தார். அதேபோன்று அம்மா அவர்களின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாங்கள் அதை உயர்த்தி வழங்கிக் கொண்டிருக்கிறோம். பேறுகால நிதி உதவி ரூ.12 ஆயிரமாக இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அம்மா அவர்கள் ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இன்று நாங்கள் அதை வழங்கி கொண்டிருக்கிறோம். இவ்வாறு அம்மா அவர்கள் நாட்டு மக்களுக்கு நல்லபல திட்டங்களை பார்த்து, பார்த்து அர்ப்பணித்த முதலமைச்சராக சிறப்பான ஆட்சியை நடத்தினார். எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் குறைக்கவில்லை, அத்தனை திட்டமும் மக்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் நம்மைப் பார்த்து என்ன செய்தார்கள், எட்டு ஆண்டுகளில் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்.
அவரை பார்த்து நான் கேட்கிறேன். 2006லிருந்து 2011 வரை திமுக ஆட்சி நடந்தது, திமுக ஆட்சியில் 5 ஆண்டுகள் மின்சார தட்டுப்பாட்டை ஒழிக்க முடியாத வக்கற்ற அரசாக இருந்தது. அம்மா ஆட்சிப் பொறுப்பேற்று 2011-ம் ஆண்டிலிருந்து
ஒரே வருடத்தில் மின்சாரம் தட்டுப்பாடே இல்லாத நிலை ஏற்படுத்தி தற்போது 2000, 3000 மெகா வாட் நம்முடைய உபரி மின்சாரத்தை வெளி மாநிலத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தொழிற்சாலைகள் உங்கள் ஆட்சியில் என்ன கொண்டு வந்தீர்கள் என்று ஸ்டாலின் கேட்கிறார், நான் கேட்கிறேன். திமுகவின் 2006-2011 வரை ஐந்தாண்டு கால ஆட்சி காலத்தில் 24 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்குதான் தொழில்துறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அம்மா அவர்களின் 8 ஆண்டு ஆட்சி காலத்தில், நாம் இப்போது ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு முதலீடு செய்யப்பட்டு, தொழிற்சாலைகளை பெருக்கி 37 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்துள்ளோம். திமுக ஆட்சிக்காலத்தை விட 6 மடங்கிற்கு மேலாக தொழில் துறையில் சாதனை படைத்துள்ளோம்.

கிராமங்களில் வாழுகின்ற மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காக அம்மா அவர்கள் விலையில்லா வெள்ளாடு அல்லது செம்மறி ஆடு, விலையில்லாத பசுமாடுகள் வழங்கினார்கள். அதை தொடர்ச்சியாக எட்டாண்டு காலமாக நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். கிராமப்புறங்களில் வாழ்கின்ற ஏழை, எளிய மக்கள் வெள்ளாடுகளையும், பசு மாடுகளையும் வளர்த்து அவர்களின் பொருளாதார நிலை உயரும் என்றும் எண்ணி, குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்தால், அந்த கிராமத்தின் பொருளாதார நிலை உயரும், கிராமத்தின் பொருளாதாரம் உயர்ந்தால், தமிழகத்தின் பொளாதராம் உயரும் என்பதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அம்மா அவர்கள், தமிழகத்துடைய அனைத்து மாணவச் செல்வங்கள் கல்வி கற்று பட்டதாரியாக உருவாக வேண்டுமென்று என்று எண்ணிய காரணத்தினால், ஒரு ஏழை மாணவனை பட்டதாரியாக உருவாக்கி விட்டால் அந்தக் குடும்பத்தில், அந்த மாணவன் படித்து பட்டம் பெறுகின்ற சூழ்நிலை ஏற்பட்டால், அந்த மாணவன் நம் தமிழ்நாட்டிலோ அல்லது வெளி மாநிலத்திலோ, வெளிநாட்டிற்கோ சென்று வருவாய் ஈட்டி உயர்த்திக் கொள்ள முடியும். அதன் மூலமாக அந்த குடும்பம் முன்னேறும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில், அம்மா அவர்கள் தமிழகத்தின் சொந்த மாநில நிதியில் உதாரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மாநிலத்திற்கு சொந்த வருவாய் என்று சொன்னால் அதில் நான்கில் ஒரு பங்கு நிதியை அம்மா அவர்கள் 2013ல் முதன் முதலாக ஆரம்ப கல்விக்கும், உயர்கல்விக்கும் ரூ.27 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கினார்.

ஆரம்பக் கல்வியில் இருந்து உயர்கல்வி வரை இலவச பாடப்புத்தகங்கள், வருடத்திற்கு நான்கு செட்டு வண்ண உடை, இலவச பாடப்புத்தகம், 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இலவச லேப்டாப், இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் இவ்வாறு 16 வகையாக உபகரணங்களை வழங்கியதால் ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை என அனைத்து மட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கை அதிமாகியுள்ளது. படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இந்தியாவிலேயே அம்மா அவர்களுடைய அரசு தான் கல்வித் துறைக்கு சிறப்பாக செயல்படுகிறது என்ற நிலையை உருவாகியிருக்கிறது.

விவசாயத் துறையில் எடுத்துக் கொள்ளுங்கள், 8 ஆண்டுகளில், 5 ஆண்டுக்குள் 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைத்து மத்திய அரசின் க்ருஷ் கர்மா விருதினை பெற்று தந்துள்ளது. இதெல்லாம் சாதனையில்லையா?
ஏதாவது ஒரு பொய்ய சொல்லனும், ஸ்டாலின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய்யைச் சொல்லி, மக்களை ஏமாற்றி கடந்த பல உண்மைக்கு மாறான தகவல்களை பொய் சொல்லி ஜெயித்தார்.

அவருக்கு ஒரு தீராத ஆசை இருக்கிறது, அம்மா அவர்கள் தந்த ஒரு திட்டத்தையும் குறைக்கவில்லை, அதற்கும் மேலாக நாங்கள் கொடுத்து கொண்டு வருகிறோம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழ்நாடு மக்கள் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாட வேண்டும் என்று பொங்கல் பரிசாக வெள்ளம், பச்சரிசி, கரும்பு, முந்திரி, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை வழங்கினார். தற்போது நாங்கள் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 சேர்த்து அம்மா அவர்களின் அரசு வழங்குகிறது.

அம்மா அவர்கள் ஆட்சியில் அறிவித்தார். வேலைக்கு பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டி வழங்கும் திட்டம், அதையும் தற்போது நாங்கள் நிறைவேற்றி ஸ்கூட்டி மானியவிலையில் வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு அண்ணன்மார்கள் எல்லாம் பின்னாடி உட்கார்ந்து கொண்டு, தங்கச்சிமார்கள் எல்லாம் ஜம்முன்னு ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆக சமத்துவம், ஜனநாயகம், சோஷலிசம் என்ற தந்தை பெரியார் கண்ட கனவை நனவாக்கிய
ஒரே தலைவி அம்மா அவர்கள் தான்.

ஸ்டாலினை பார்த்து நான் கேட்கிறேன். உங்கள் ஆட்சி சாதி சண்டை, மத கலவரத்தை உருவாக்கிவிட்டு, சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு, எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை கற்பழிப்பு ஜாதி பிரச்சினைகள். மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தை எரித்து அங்கு மூன்று அப்பாவி ஊழியர்கள் இறந்துபோனார்கள். பாவம் அந்த குடும்பம் நடுத்தெருவில் உள்ளது. இதுதானே உங்கள் ஆட்சியில் நடந்தது. மக்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி. அதை எல்லாம் அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மீட்டு கொடுத்தார்களா? இல்லையா, இதுதான் அம்மாவின் அவர்களின் ஆட்சியின் சாதனை.

ஆனால், இனி எந்த காலத்திலும், ஸ்டாலின் பேச்சை மக்கள் எந்த காலத்திலும் நம்புவதற்கும் தயாராக இல்லை என்ற நிலை இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. அவர் சொன்னார் நாங்கள் வெற்றி பெற்றால் வங்கியில் அடகு வைத்த 5 பவுன் நகைகளை திருப்பித் தருவதாக சொன்னார், தந்தாரா? நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிறது. திருப்பிக் கொடுத்தாரா, கொடுக்கவில்லை.

இன்னொரு பெரிய ராஜதுரோகம் செஞ்சிருக்காங்க. யாரு, காங்கிரசும், திமுகவும் சேர்ந்துதான். எது காவேரி பிரச்சினை, இங்கு காங்கிரஸ் கட்சிதான் போட்டியிடுகிறது, காங்கிரஸ் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட இந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் உங்களுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது என்பதை நினைவுப்படுத்த கடமைப்பட்டுள்ளேன் ஏனென்று சொன்னால், நமக்கும், கர்நாடகத்திற்கும் காவேரி நதிநீர் பங்கிட்டில் 17 ஆண்டுகாலமாக பிரச்சினையில் இருந்து, அந்த பிரச்சினையை தீர்க்க காவேரி நதிநீர் ஆணையம் அமைத்து விசாரித்து, காவேரி நதி நீர் ஆணையத்தின் மூலமாக 2007 ல் காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வருகிறது.

அந்த இறுதி தீர்ப்பு வந்த போது தமிழகத்துடைய முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, அம்மா அவர்கள் எதிர்க்கட்சி தலைவர், அப்போது அம்மா அவர்கள் சொன்னார். 17 ஆண்டுகளுக்கு பின்னாலே ஒரு இறுதிதீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த இறுதி தீர்ப்பின் அதிகாரத்தினை நிலை நிறுத்த வேண்டுமென்றால், அந்த தீர்ப்பினை அதை மத்திய அரசு இதழில் இடம்பெற வேண்டுமென்று அம்மா அவர்கள் பலமுறை சொன்னார். அப்போதைய முதல்வர் கருணாநிதி கேட்கவில்லை, ஆனால், அவர் அதை செய்யாமல் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருந்தார்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ல் ஆட்சி பொறுப்பேற்றவுடன் பலமுறை டெல்லி சென்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தினார். பிறகு உச்சநீதிமன்றம் சென்று வாதாடி போராடி ஏழாண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி காவேரி நதி நீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்ட ஒரே தலைவி, புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் தான். மத்திய அரசிதழில் வெளியிட்ட பிறகு, உச்சநீதிமன்ற தீர்ப்பாணைக்கு பிறகு காவேரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் அமைக்க வேண்டும். இந்த பிரச்சினையையும் அம்மா உச்சநீதிமன்றம் எடுத்துச் சென்றார். இந்த வழக்கினை நாம் இன்றைக்கு துரிதப்படுத்தி காவேரி நதிநீர் ஆணையத்தினையும், காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்கும் உத்தரவாதத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஒரு உத்தரவாதம் கிடைத்திருக்கிறது.

காவேரி நீர் இங்கு தஞ்சை தரணிக்கு வந்தால்தான், தமிழகத்தின் புண்ணிய பூமி, தஞ்சை தரணியில் உள்ள விவசாயிகள் சேற்றில் கை வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும், இப்படிப்பட்ட ஜீவாதார பிரச்சினைகளில் நாம் 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி, போராடி பெற்ற தீர்ப்பை, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கர்நாடக மாநிலத்திற்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த போது, என்ன பிரச்சாரம் செய்தார் தெரியுமா? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதுவும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காவேரி நதிநீர் ஆணையத்தை நாங்கள் கலைப்போம், எவ்வளவு பெரிய ராஜதுரோகம்.

அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு நாம் வாக்கு அளிக்கலாமா? அதைவிட ஒரு கொடுமை என்னென்னா? கர்நாடகத்தில் நான்கு அணைகள் கட்டியுள்ளார்கள். இன்றைக்கும் மேகதாது அணை கட்டுவதற்கும் முனைப்போடு இருக்கிறது. இந்த பிரச்சினையையும் அம்மா அவர்கள் உச்சநீதிமன்றம் எடுத்து சென்று அங்கு நிலுவையில் இருக்கிறது வழக்கு. அணை கட்டக்கூடாது என்று நாம் வலியுறுத்தியுள்ளோம். அதையும் இந்த ராகுல் காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மேகதாதுவில் அணை கட்டுவோம். எவ்வளவு ராஜதுரோகம் இதையெல்லாம் சிந்தித்துபார்க்க வேண்டும் இவ்வாறு அவர்கள் துரோகத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.

ராகுல்காந்தி டெல்லியில் இருந்து ஒரு கூட்டத்துக்கு வருகிறார். அப்போது ஸ்டாலின் , ராகுல் காந்தி பக்கத்தில் சென்று அவருடைய கையை லேசாக தூக்கி இவர்தான் அடுத்த முதலமைச்சருன்னு சொல்றாரு. இதைவிட கேவலம் என்ன கொடுமை, இவ்வளவு செய்துவிட்டு நாங்குநேரி தொகுதிக்கு வாக்கு கேட்டுக் கொண்டு வருகிறார்கள். நல்ல சந்தர்ப்பம். காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய தருணம். வாக்காள பெருமக்களாகிய நீங்கள் எஜமானர்கள் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குங்கள்.ஆக பெரியோர்களே, தாய்மார்களே இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நாங்குநேரி தேர்தலிலே திமுக-காங்கிரஸ் தோல்வியடைய வைத்து, நல்ல பாடம் புகட்ட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில், நாம் ஆளுங்கட்சியாக இருக்கிறோம். நமது வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். அவருக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.