தற்போதைய செய்திகள்

மக்களுக்கு தேவையான திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றி தருவோம் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பிரச்சாரம்

திருநெல்வேலி

மக்களுக்கு தேவையான திட்டங்களை நிச்சயம் நிறைவேற்றி தருவோம் என்று நாங்குநேரி தொகுதியில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பிரச்சாரம் செய்தார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனை ஆதரித்து, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ சீவலப்பேரி பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இப்பகுதியை சேர்ந்த ரெட்டியார்பட்டி நாராயணன் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரச்சாரம் செய்தபோது மக்களாகிய நீங்கள் இரட்டை இலைக்கு தான் வெற்றி என்ற உறுதியை தரும் வகையில் மகத்தான வரவேற்பை அளித்தீர்கள்.

அதுமட்டுமல்லாது ஏற்கனவே இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் தொகுதி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை, அதனால் தான் இங்கு அவரால் பிரச்சாரம் செய்ய வரமுடியவில்லை. அதேபோல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் இந்த தொகுதியை சேர்ந்தவர் இல்லை. அவர் உங்களுக்கு வேண்டிய திட்டங்கள் எதுவும் செய்து தர மாட்டார். இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர். இந்த பகுதியை சேர்ந்த யாரும் வேட்பாளராக நிற்கவில்லை. ஆனால் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம். உங்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிச்சயம் செய்து தருவோம்.

நாங்குநேரி தொகுதியில் ஏராளமான அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த அடிப்படை வசதிகளை நூற்றுக்கு நூறு சதவீதம் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று ரெட்டியார்பட்டி நாராயணன் நிச்சயம் நிறைவேற்றி காட்டுவார். ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளிக்குமாறு உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.

பிரச்சாரத்தின் போது சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், பொன்னம்பலம், மாவட்ட கழக நிர்வாகிகள் அம்பலம், எஸ்.என்.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.