சிறப்பு செய்திகள்

மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தொடர்ந்து செயல்படுவோம் – ஒருங்கிணைப்பாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி

சென்னை

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளின் வெற்றி கழக அரசுக்கு மக்கள் வழங்கியிருக்கும் நன்சான்றிதழ். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தொடர்ந்து செயல்படுவோம். கழகம் ஆயிரம் காலத்து பயிராக தழைத்து மக்கள் பணியாற்றும் என்ற அம்மாவின் கனவை நனவாக்குவோம் என கழக ஒருங்கிணைப்பாளர்கள் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் கழகம் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும், புரட்சித்தலைவர் வழிநடப்போம், புரட்சித்தலைவியின் படை என்றும் வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கழகத்தின் வெற்றிக்கு உழைத்த அனைத்து தோழமை கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-