தமிழகம்

மருது பாண்டியர்கள் சிலைக்கு துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

மதுரை

மருது பாண்டியர்களின் 218-வது நினைவு நாளையொட்டி மதுரையில் உள்ள அவர்களது திருவுருவ சிலைக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததால் அக்டோபர் மாதம் 24 -ந்தேதி மாமன்னர் மருது பாண்டியர்கள் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். அந்த வீர தியாகிகளின் 218-வது நினைவு நாளையொட்டி மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை தெப்பக் குளத்தில் உள்ள மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மருது பாண்டியர்கள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜூ, ஜி.பாஸ்கரன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜெ.ராஜா, சி.தங்கம், எம்.எஸ்.பாண்டியன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், வி.கே.எஸ்.மாரிச்சாமி, அண்ணாநகர் முருகன், முத்து இருளாண்டி, தளபதி மாரியப்பன், சோலைராஜா, அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.