தற்போதைய செய்திகள்

2 தொகுதிகளில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற தந்த முதலமைச்சருக்கு கழக அம்மா பேரவை பாராட்டு

மதுரை

இரண்டு தொகுதிகளில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுத் தந்த தமிழக முதலமைச்சருக்கு கழக அம்மா பேரவை பாராட்டு தெரிவித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கழக அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வேலம்மாள் ஐடா ஸ்கட்டர் மஹாலில் நடைபெற்றது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பியல்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தலைமையில் இரண்டு தொகுதிகளில் வெற்றியை பெற்றுத் தந்த முதலமைச்சரை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விபரம் வருமாறு:

தமிழர் குலசாமி இதய தெய்வம் அம்மா அவர்களின் புனித அரசை தலைமைதாங்கி வழி நடத்தி வருகின்ற இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், காவேரியை மீட்ட கரிகாலசோழன், குடிமராமத்து நாயகன், பாரதப் பிரதமரையும், சீன தேசத்து அதிபரையும் மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து அதன் மூலம் தமிழகத்தின் நாகரிகத்தை உலகறிய செய்திட்ட அடையாளம்,

வெளிநாட்டு முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்து அதன் மூலம் தமிழகத்தின் பொருளாதாரத்தை இந்திய திருநாட்டில் முதன்மை நிலைக்கு உயர்த்திய பொருளாதார சாணக்கியர். 40 நாட்களில் ஒரு கோடி பக்தர்களை காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசிக்க செய்திட்ட மனிதநேய பண்பாளர், கூர்மை மதிநுட்பமும், தொலைநோக்கு பார்வையும், தாயின் கருணையும், தன்னகத்தே கொண்டிருக்கின்ற பண்பாளர்.

தமிழ்நாட்டில் அம்மாவின் அரசு என்றும் தொடர வேண்டும் என்று, விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் வரலாற்று வெற்றியை தாயுள்ளத்தோடு தந்திட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும், அந்த வெற்றியை தன்னுடைய அயராத உழைப்பில் பெற்று தந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, அவருக்கு துணை நிற்கிற துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கும், தலைமை கழக நிர்வாகிகளுக்கும் கழக அம்மா பேரவை சார்பிலும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல் பல்வேறு பொய் பிரச்சாரம் செய்தார். அந்த பொய் பிரச்சாரத்திற்கு முடிவு கட்டும் வகையில்தான் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
2 தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் இந்த தேர்தல் 2021 தேர்தலுக்கு அச்சாரம் என்று கூறினார். அது மட்டுமல்லாது இந்த இரண்டு இடத்தில் ஜெயித்தால் ஆட்சியை பிடிப்போம்.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவோம் என்று கூறினார். மேலும் முதலமைச்சராக கனவு காண்டு பல்வேறு ஆணவத்தோடு பல்வேறு பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். ஆனால் மக்கள் அவருக்கு சரியான தீர்ப்பு தந்துள்ளனர். இன்றைக்கு தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம் என்று முதலமைச்சர் செயல்பட்டார். அதற்கு நல்ல பரிசை மக்கள் வழங்கியுள்ளனர். இதேபோல் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் இதே போன்ற நல்ல பரிசினை மக்கள் வழங்குவார்கள்.

இரண்டு படம் நடித்த உதயநிதி ஸ்டாலின் கூட முதல்வரை நா கூசுகிற வார்த்தைகளால் விமர்சிக்கிறார். முதலமைச்சரை பற்றி பேச உதயநிதிக்கு எந்த அருகதையும் கிடையாது. வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கழக தொண்டர்கள் கட்சிக்கு வாக்களிப்பது மட்டும் போதாது, பொதுமக்களிடம் அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி வாக்குகளை கட்சிக்கு வாக்குகளை பெற்று தர வேண்டும் என உங்களை பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் கழக துணை செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட கழக துணை செயலாளர்கள் அய்யப்பன், பஞ்சம்மாள், மாவட்ட கழக இணை செயலாளர் பஞ்சவர்ணம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.