மதுரை

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதி

மதுரை

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ளாட்சி பணி குறித்து கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.தலைமை வகித்து ஆலோசனை வழங்கி பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஒம்.மகேந்திரன், பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழிகாட்டுதல்படி கழக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றினர். இதில் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி வருகின்ற உள்ளாட்சி தேர்தல்களில் அச்சாரம் ஆகும்.

அதுமட்டுமல்லாது அடுத்து வரப்போகும் சட்டமன்றத்திலும் கழகம் தான் வெற்றி பெறும். திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும். ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக மாட்டார். அவர் கனவு ஒரு போதும் பலிக்காது. இந்த சிறப்பான வெற்றியை பெற்று தந்த முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் இக் கூட்டத்தின் வயிலாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.