இந்தியா மற்றவை

2 நாள் அரசுமுறைப் பயணமாக சவுதி சென்றார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக சவுதி சென்றடைந்தார். சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக  சவுதி அரேபியாவுக்கு சென்றார். கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் ரியாத் மாகாண ஆளுநர் பைசல் பின் பந்தர் அல் சவுத் வரவேற்றார்.

அங்கு தங்கி இருக்கும் அவர், ரியாத்தில் நடை பெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3 வது அமர்வில் கலந்து கொள்கிறார். சவுதியில் தங்கி இருக்கும் அவர் ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்ற அமர்வில் கலந்து கொள்கிறார். அதைத்தொடர்ந்து அவர் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல் சாத்தையும் சந்தித்து பேசுகிறார்.