தமிழகம்

கொரோனா: தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகள் கட்டாயம் அரசு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு

கொரனாவிற்கு சிகிச்சையளிக்க 25 சதவீத படுக்கைகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

முதல்வரின் உழைப்பு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வைரஸ் நோய் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கையை இரவு பகல் பாராமல் எடுத்துவருகிறார்.இந்த நோயினால் ஒரு உயிர் கூட இழக்க விடமாட்டோம் என்று உறுதியுடன் செயல்பட்டுவருகிறார்.
பொதுமக்கள் அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் இந்த வைரஸ் பரவல் தொடர்பாக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது.

25 சதவீதம்

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் 25 % படுக்கைகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் இந்த படுக்கைகள் உள்ள அறைகள் அனைத்து நவீன வசதிகள் அடங்கியதாக இருக்க வேண்டும், மற்ற வார்டுகளில் இருந்து முற்றிலுமாக தனிமைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்

இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் இல்லையெனில் தவறக்கூடிய மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.