மதுரை

மக்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிறது அம்மாவின் அரசு – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பெருமிதம்…

மதுரை:-

மக்கள் தேவைகளை அம்மாவின் அரசு உடனுக்குடன் நிறைவேற்றுகிறது என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பெருமிதத்துடன் கூறினார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் வடக்கு தொகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு குறைகளை மனுக்களாக கொடுத்தனர். பலர் ரூ.1000 முதியோர் உதவித்தொகை வேண்டி மனு கொடுத்திருந்தனர். அந்த மனுக்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு உடனடியாக 25 நபர்களுக்கு ரூ.1000 முதியோர் உதவித்தொகை வழங்கும் ஆணையை மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் அம்பலம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பகுதி கழக செயலாளர் ஜெயவேல், பொதுக்குழு உறுப்பினர் ரா.முத்துக்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அபுதாகிர், வட்ட கழக செயலாளர் ஒச்சாத்தேவர், தங்கப்பாண்டியன், கே.கே.நகர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் முதியோர் உதவித்தொகை ஆணைகளை வழங்கி வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:- 

அம்மா அவர்கள் ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் திட்டங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்று தான் முதியோருக்கான ஓய்வுத்திட்டம். இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் லட்சகணக்கான முதியோர், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டவர்கள் உள்ளிட்டோர் பயன்பெற்று வருகின்றனர்.

முதலமைச்சர் எங்களை போன்ற சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து திட்டங்களும் நிலுவையில் இருக்கக்கூடாது. தொடர்ந்து அரசின் திட்டங்கள் பயனாளிகளுக்கு உடனடியாக சேர வேண்டும் என்று கூறியுள்ளார் அதன் படியே நாங்கள் செயலாற்றி வருகிறோம். மக்கள் தேவைகளை அம்மாவின் அரசு உடனுக்குடன் நிறைவேற்றுகிறது.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.