தற்போதைய செய்திகள்

எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்ட ரூ.65 கோடி ஒதுக்கீடு

சென்னை 

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை ஆசியாவிலேயே மிக பழமையானது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 1000 நோயாளிகள் வரை வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போதுமான இடவசதி இல்லை. எனவே கூடுதல் கட்டடம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மருத்துவக்கல்வி இயக்கம் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.65 கோடி நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.