சிறப்பு செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி கழக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு – சபாநாயகர் ப.தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடித்து அமோக வெற்றி பெற்ற கழக எம்.எல்.ஏ.க்கள் இருவரும்  பேரவைத் தலைவர் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களுக்கு பேரவை தலைவர் ப.தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், டாக்டர் வெ.சரோஜா, எஸ்.வளர்மதி, வி.எம்.ராஜலட்சுமி, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் டாக்டர் மு.தம்பிதுரை, கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன் மற்றும் ஏராளமான கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக வெற்றி பெற்ற கழக எம்.எல்.ஏ.க்கள் மெரினா கடற்கரையில் துயில் கொள்ளும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.