தற்போதைய செய்திகள்

சிறுவன் சர்ஜித் மீட்பு விகாரம்,ஸ்டாலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

ஸ்ரீவில்லிபுத்தூர்

குழந்தை மீட்பு பிரச்சினையில் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும். இடைத்தேர்தலை போன்றே கழக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் 100 சதவீதம் வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை சில எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால்,அதுபோன்று எந்த ஒரு தனி விருப்பமும் கட்சியில் கிடையாது. தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பதே முறையாக இருக்கிறது.

குழந்தை சுஜித் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது. தனிநபர் இடத்தில் பெற்றோர்களின் அஜாக்கிரதையால் நடந்தது. எனவே, குழந்தை மீட்பு பிரச்சினையில் ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது. புத்தாண்டு பிறப்பதற்குள் பத்திரிகையாளர் நல வாரியம் குழு அமைக்கப்படும். புது படத்தை சிறப்புக் காட்சி என்ற பெயரில் அரசு நிர்ணயிக்கப்பட்ட ஒரு காட்சிக்கு அனுமதி வாங்கிவிட்டு 2, 3 காட்சிகள் ஒளிபரப்புவதால் அதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவும், இனி அது நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்பு காட்சிகளுக்கு தனி கட்டணம் வசூலித்து
அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.