திருவண்ணாமலை

உள்ளாட்சித் தேர்தலில் விழிப்புடன் செயல்பட்டு கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் – நிர்வாகிகளுக்கு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள்

திருவண்ணாமலை

வரும் உள்ளாட்சித் தேர்தலில் விழிப்புடன் செயல்பட்டு கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று நிர்வாகிகளுக்கு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட செய்யாறு, வந்தவாசி, போளூர், கீழ்பென்னாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் பிற அணி செயலாளார்கள் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேத்துப்பட்டு பஸ்நிலையம் அருகில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமை வகித்து பேசியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலின்போது கழக நிர்வாகிகள் விழிப்புடன் செயல்படவேண்டும். திமுகவினர் கடந்த 8ஆண்டுகளாக பதவியில் இல்லாமல் உள்ளனர். அவர்களை நாம் சமாளிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றி பெற்று அம்மாவின் அரசு தொடரும். கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் பேசினார்.