தற்போதைய செய்திகள்

தருமபுரியில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைத்தார்

தருமபுரி:-

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி, தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து அத்துறைக்கென தனி அமைச்சகத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கினார். வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பண முடிப்பு வழங்கும் நிகழ்ச்சிகளை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புற ஏழை, எளிய பள்ளி மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் கிராமப்புற விளையாட்டு திடல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகளில் முதல் 2 இடங்களை பெறுவோர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். இந்த வாய்ப்புகளை பள்ளி மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.