மதுரை

செங்கல் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதி

மதுரை

செங்கல் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

மதுரையில் 6 மாவட்டத்தைச் சேர்ந்த வைகை செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுப்பொருள் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாசம், வைகை செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் நூர் முகமது, துணைத்தலைவர் ஜெயராஜ், சிவகங்கை மாவட்ட தலைவர் பி.ஆர்.ராஜசேகர், மதுரை மாவட்ட தலைவர் யாசிக், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகம் தற்போது கட்டட கலையில் சிறந்து விளங்கி வருகிறது. வெளி நாட்டினை போல் நாம் கட்டட கலையில் சிறந்து விளங்கி வருகிறோம். இந்த கட்டட கலைக்கு மிகவும் முக்கியமானது செங்கல். அந்த செங்கலை உருவாக்குவதுதான் நீங்கள்.

எப்போதும் இந்த அரசுக்கு நல் ஆதரவை அளித்து வருகிறீர்கள். தொடர்ந்து நீங்கள் இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து கூறியுள்ளீர்கள். அவை நிச்சயம் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும். உங்களுக்கு நல்ல வழி காட்டுதலை முதலமைச்சர் உருவாக்கி தருவார்.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.