சிறப்பு செய்திகள்

முத்துராமலிங்கதேவர் தங்க கவசம் வங்கியில் மீண்டும் ஒப்படைப்பு – துணை முதலமைச்சர் கையொப்பமிட்டு வழங்கினார்

மதுரை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு கழகத்தின் சார்பில் 9.12.2014 அன்று ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை புரட்சிதலைவி அம்மா அவர்கள் வழங்கினார். இந்த தங்க கவசம் ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி விழாவில் அணிவிக்கப்பட்டு அதன்பின் மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

தேவர் ஜெயந்தியையொட்டி கடந்த 24-ந்தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு வங்கியில் இருந்து தங்க கவசம் பசும்பொன்னுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த 8 நாட்கள் பொதுமக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு தற்போது விழா முடிந்தவுடன் மீண்டும் தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட வங்கியில் தங்க கவசத்தை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், தேனி மாவட்ட கழக செயலாளர் சையதுகான், மதுரை மாநகர் மாவட்ட கழக பொருளாளர் ராஜா, மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், கழக அமைப்பு செயலாளர் முத்துராமலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் அண்ணாநகர் என்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.