சென்னை

தண்டையார்பேட்டையில் 2000 பேருக்கு நிலவேம்பு குடிநீர் – ஆர்.எஸ். ராஜேஷ் வீடு, வீடாக சென்று வழங்கினார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரது வழிகாட்டுதலின்படி வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஆர்.கே.நகர் 47-வது கிழக்கு வட்டம் மன்னப்ப முதலி தெரு பகுதியில் உள்ள குழந்தைகள், மாணவ, மாணவிகள், மற்றும் வியாபாரிகளுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் நிலவேம்பு மூலிகை குடிநீருடன் அரை லிட்டர் ஆவின் பால், மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுளை வீடு, வீடாக சென்று 2000-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கினார்.

பின்னர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழக மக்களை என்றுமே அரணாக காக்கும் வகையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் தலைமையிலான கழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சுகாதாரத் துறையின் கீழ் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆர்.கே.நகர், பகுதியில் முதியோர், பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள், மற்றும் வியாபாரிகளுக்கு நிலவேம்பு குடிநீரை நேரடியாக சென்று வழங்கி டெங்கு காய்ச்சலை தடுக்கும் விழிப்புணர்வு பணிகளை மாவட்ட கழகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான முதற்கட்ட பணிகள் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் மூலம் 50 லிட்டர் கேன் மூலம் சைக்கிளில் சென்று வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஆர்.எஸ்.ராஜேஷ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ். ஜனார்த்தனம், ஏ.கணேசன், எம்.என்.சீனிவாச பாலாஜி, இ.வேலு மேஸ்திரி, புருஷோத்தமன், எம்.ராமமூர்த்தி, உள்ளிட்ட நிர்வாகிகள், பகுதி கழகத்தினர், வட்ட கழகத்தினர், பிற அணி அமைப்பு நிர்வாகிகள், மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.