சிவகாசி

சிவகாசி ஒன்றிய வளர்ச்சி பணிகள் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

விருதுநகர்

சிவகாசி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு நடத்தினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையாளர்கள் சுப்பிரமணியன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 56 ஊராட்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் வளர்ச்சி திட்டம், ஒன்றிய பொது நிதி, முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள், தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்டும் திட்டம், கனிம மற்றும் சுரங்கப்பணிகள், 14-வது நிதிக்குழு மானிய பணிகள், நபார்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மற்றும் பிற துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஊராட்சி வாரியாக அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர் புதுப்பட்டி கருப்பசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பொன்சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.