தற்போதைய செய்திகள்

பேரிடர் காலங்களில் ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

சென்னை:-

பேரிடர் காலங்களில் ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி அளித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேரிடர் மீட்பு தொடர்பான கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மேலாண்மை குழுவினர், பேரிடர் காலங்களில் ஏற்படக்கூடிய விபத்தில் இருந்து காப்பாற்றுவது, பாதுகாத்து கொள்வது எனசெய்முறை விளக்கங்களை செய்து காட்டினர். இதனை பல்வேறு பள்ளி மாணவர்கள் கண்டு ரசித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி காவல் ஆணையர்
விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பொறுப்பு ஆணையர் சைலேந்திரபாபு, நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

ஒரு சாதனை படைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான், ஒவ்வொரு வருவாய் வட்டங்களிலும், நீர் நிலைகளில் ஏற்படும் விபத்தில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்ள, ஒரு விவசாயி மகனாக, உழவனாக இந்த மண்ணிலே பிறந்து, இன்றைக்கு உழைப்பால்உயர்ந்து, சாமானிய முதல்வராக, தொட்டது எல்லாம் துலங்கும் விதமாக எடப்பாடியார் உள்ளார். ஊடகங்களுக்கு பிடித்த நண்பர், வார்த்தை சொற்களால் எல்லோரையும் கவரும், எங்களுக்கு அரசியல் வழிகாட்டியாக இருக்கும் மீன் வளத்துறை அமைச்சர் உள்ளார். நீர் நிலைகளில் எப்படி எல்லாம் விபத்து நடக்கும். ஜப்பான் பற்றி கூட மீன் வளத்துறை அமைச்சர் சொன்னார்.

அங்கு கூட நிலநடுக்கம் வரும். அதை பற்றி செய்திகளை படிக்கிறோம். ஆனால், உயிரிழப்புகள் கிடையாது. பெரிய பெரிய வீடுகள் இடிந்தாலும், குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு அவர்களிடத்தில் இருக்கும். தங்களை தாங்கள் தற்காத்துக் கொள்ளும், குடும்ப உறுப்பினர்களை தற்காத்து கொள்கின்ற, விழிப்புணர்வு குறித்து தான், ஜப்பான் குறித்து, மீன் வளத்துறை அமைச்சர் சொன்னார், உலக நாடுகளில் கூட, மிகப்பெரிய விழிப்புணர்வு உள்ளது.

அதை போல், தமிழகத்தில், விழிப்புணர்வு ஏற்பட்டு, கவனக்குறைவாலோ உயிரிழப்புகள் இல்லாமல் இருக்க, முதலமைச்சர் உத்தரவுப்படி வருவாய்த்துறையில், ஒவ்வொரு மாவட்டங்களிலும், குறிப்பாக சென்னையில், விழிப்புணர்வு முகாமை ஏற்படுத்தி உள்ளோம். திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி என 32 மாவட்டங்களில், இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. இன்று எண்ணி பார்க்கிறோம், பேரழிவுகளில் தற்காத்துக்கொள்ள, அக்டோபர், டிசம்பர் மாதங்களில், வடகிழக்கு பருவ மழை குறித்து சொல்வார்கள், அதில், நாம் தாழ்வான பகுதிகளில் இருந்து எப்பது தற்காத்துக்கொள்வது எனவும், திறந்த
வெளியாக உள்ள குளம், குட்டைகள், சாக்கடை குட்டைகள், பாதாள சாக்கடைகள், நீர் தேங்கியுள்ள பகுதிகள், ஆற்றில் தேங்கியுள்ள நீர் நிலைகளில், நாம் எப்படி கையாள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில், அந்த 2 வயது குழந்தை விழுந்து விட்டது, 8 ஆண்டுகளுக்கு முன்பு தூர் வாரப்பட்டது, தண்ணீர் வரவில்லை, அதனால், மண்ணைப்போட்டு மூடி விட்டோம், ஆனால், மழை பெய்தபோது,அந்த மண் உள்வாங்கியது தெரியவில்லை. சிலர் கவனக்குறைவாலே, அந்த குழாயில், குழந்தை விழுந்து இறந்து சோகத்தை ஏற்படுத்தி விட்டது, குழந்தையை, தெய்வமாக பாதிக்கிற இடம் தமிழகம் ஆகும். ஆகவே , அது குழந்தையை எடுக்கும் முயற்சி அல்ல, ஒரு தெய்வத்தை எடுக்கின்ற முயற்சியாகும்.

ஆழ்துளை கிணற்றில், பாறைகள் தான் இருந்தது. 3 அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரி என வழி வழியாக, குழந்தையை காப்பாற்ற இருந்தனர். ஒவ்வொரு ஆழ் துளை கிணறுகள் வேறுபட்டு இருக்கும். ஒன்று மண்ணாக இருக்கும், பாறைகளாக இருக்கும், ஆழம் குறைவாக இருக்கும், நவீன கருவிகள், உலகில் எங்கு இருந்தாலும், நவீன கருவிகள் கொண்டு வர உத்தரவிடுகிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை தீபாவளி திருநாள், உலகமெங்கிலும் பார்க்கிறார்கள். அவர்கள் குழந்தையாக எண்ணி, ஆனால், யாரும் தீபாவளி கொண்டாடவில்லை, பட்டாசு வெடிக்கவில்லை, தன் சகோதரர் விழுந்ததாக எண்ணினார்கள். மிகப்பெரிய சவாலை ஏற்று இருந்தோம். அந்த நேரத்தில், முதல்வர் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி, அப்போதும், முதல்வர் தொடர்ந்து, எங்களிடத்தில் உத்தரவு போட்டுக் கொண்டே இருந்தார். உலகத்தில் எந்த கருவி இருந்தாலும் கொண்டு வாருங்கள் என்றார். எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை என அந்த துயர நேரத்திலும், எங்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார். எத்தனை போராட்டம்,

நீங்களே பார்த்து இருப்பீர்கள். குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது. ஆனால் அந்த பெற்றோர்கள் அந்த ஆழ்துளை கிணற்றை மூடியிருக்க வேண்டும். அந்த குழந்தைஎ ன்னை பார்த்து எனக்காக முதல்வர் உள்ளிட்ட எல்லோரும் காப்பாற்ற பாடுபடுகீறீர்கள். ஆனால் அந்த ஆழ்துளை கிணறு மீது ஒரு சிமென்ட் சீட் போட்டு மூடியிருந்தால் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா என்று கேட்பது போல தோன்றுகிறது. எனவே இந்த விஷயத்தில் நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட, அரியானாவில் ஒரு குழந்தை விழுந்துள்ளது, பக்க வாட்டில் துளையிட்டும் பயனில்லை, ஆக்சிஜன் செலுத்தினார்கள். படம் பிடித்து, குழந்தையின் நிலைமையை அடி அடியாக பார்த்தனர். தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் மீட்க முயற்சித்தனர். எத்தனை தொழில் நுட்பம், எத்தனை சவால், ஆனால், எத்தனை போராட்டம் என்றாலும், இந்த நிகழ்ச்சியின் நோக்கம் விழிப்புணர்வு ஆகும், வார பத்திரிகைகளில் கூட குழந்தையை காப்போம் என கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். ஆழ் துளை கிணறுகளை மூடி வைப்போம் என எழுதியுள்ளனர். உள்ளாட்சித்துறை அமைச்சர், ஐ.ஏ.எஸ் அதிகாரி மகேஷ் ஆகியோர், எங்கெல்லாம் ஆழ் துளை கிணறுகள் உள்ளதோ, அவற்றை, மழை நீர் சேகரிப்பு குழாயாக மாற்றுவோம் என சொல்லியுள்ளனர்.

செல்பி எடுக்காதீர்கள் என சொல்கிறோம், அதன் விபரீதத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், சில தினங்களில், திருமண நடைபெற இருந்த மணப்பெண், செல்பி மோகத்தில், கிணற்றில் விழுந்து இறந்தார். குறிப்பாக நீர் நிலைகள், குட்டைகள், குளங்கள், நீர் தேங்கி நிற்கும் இடங்களில், செல்பி எடுப்பதை நீங்கள், அறவே தவிர்க்க வேண்டும். பல முறை சொல்லியுள்ளோம். அரசாங்கள் கூறியுள்ளது, ஊடகஙள் சொல்லியுள்ளது, ஆனால், அவர்களிடத்தில் விழிப்புணர்வு இல்லை. கவனக்குறைவாக உள்ளார்கள்.

செல்பி எடுக்கும் போது, தள்ளி நில்லு, தள்ளி நில்லு என கூறி, அவர்களிடத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இது, கார் இடிக்கிறதா என பார்த்து, ஆம், கார் இடிச்சிடுச்சி என சொல்வது போல் உள்ளது. உயிரே போன பிறகு , செல்பி மோகம் என்ன, கிராமத்தில் சொல்வார்கள், மின்னல் அடிக்கிறது போல் உள்ளது. தலைச்சம் பிள்ளைங்கள், வீட்டுக்குள் இருங்கள் என, ஆனால், அப்போது தான், இவன் வெளியில் சென்று பார்ப்பான், மின்னலா, நானா என சவால் விடுவான், நான்கு பேர் ஒன்று சேர்ந்து, மின்னல் வருமா, வராதா, வரும் ஆனா வராது என்பான்.

தனி தனியாக இருந்தாலும், மின்னல் விட்டு விட்டு சென்றிருக்கும், புதுக்கோட்டையில், நான்கு பேரை மின்னல் தாக்கியது, இது போன்று நிகழ்வுகள் ஏற்பட கூடாது என பள்ளிகளில்,கல்லூரிகளில் , அமைச்சர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அரசு முன்னெச்சரிக்கையாக உள்ளது, மாணவர்கள் முன்னேற்பாடுகளுடன் இருக்க வேண்டும், ஒரு கை மட்டும் இருந்தால் சத்தம் வராது. வலது கரமாக நீங்கல் இருந்தால் தான், ஒரு கரவொலி நம்மால் எழுப்ப முடியும்.

மதுரையில் அதிகாரி சைலேந்திர பாபு பேசினார், இந்த நிகழ்ச்சியின் நோக்கம், தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றார். ஒவ்வொருவரும் ஒரு பாதுகாவலனை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும், பாதுகாவலனை உருவாக்க வேண்டும், விழிப்புணர்வோடு, முன்னெச்சரிக்கையோடு, தமிழனை உருவாக்க வேண்டும், இனி தமிழகத்தில், கவனக்குறைவால், ஒரு உயிரிழப்பு வரக்கூடாது என முதல்வர் எண்ணப்படி, இந்த விழிப்புணர்வு முகாமை வலு சேர்க்கும் விதமாக, ஒவ்வொரு வருவாய் காவல் மாவட்டங்களில், மாணவ செல்வங்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு, என்,எஸ்.சிமாணவர்கள், துறை சார்ந்த அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தர வேண்டும். கடமை, சேவை செய்யும் ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜப்பான் நாட்டை போல், தமிழகத்திலும்,விழிப்புணர்வில் முதல் இடத்தை பிடிப்போம் என உறுதியேற்போம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.