தற்போதைய செய்திகள்

மாணவ- மாணவிகள் 3 பேருக்கு கல்வி விடுதி கட்டணம் – முதலமைச்சர் வழங்கினார்.

சென்னை 

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 5.11.2019 அன்று தலைமைச் செயலகத்தில், பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் சார்பில் வன்னியகுல சத்திரிய வகுப்பைச் சேர்ந்த, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஆ.கீதாஞ்சலி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி க.அபிநயா ஆகியோருக்கு கல்லூரி விடுதி வாடகை மற்றும் உணவுக் கட்டணத் தொகையாக நான்கரை ஆண்டுகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதங்கள் மற்றும் நடப்பாண்டிற்கான விடுதிக் கட்டணமான ரூ.50,000-க்கான காசோலைகளையும்,

திருச்சி, அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி லெ.லட்சுமிபிரியாவிற்கு கல்லூரி கல்வி கட்டணத் தொகையாக நான்கு ஆண்டுகளுக்கு சேர்த்து ரூ.1,18,200-க்கான ஒப்புதல் கடிதம் மற்றும் நடப்பாண்டிற்கான கல்வி கட்டணமான ரூபாய் 18,600- க்கான காசோலையையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் க. சண்முகம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ஆ.கார்த்திக், பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவர் நீதியரசர் எஸ். இராஜேஸ்வரன் (ஓய்வு), தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைகொடைகள் வாரியத் தலைவர் ஜி.சந்தானம், (ஓய்வு) மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.