கோவை

யோகா பயிற்சி பெற்றால் மட்டுமே எதையும் தாங்கி கொள்ள முடியும் – பெண்களுக்கு டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் அறிவுரை

கோவை:-

யோகா பயிற்சி பெற்றால் மட்டுமே எதையும் தாங்கிக் கொள்ள முடியும் என்று பெண்களுக்கு ஆலயம் அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் அறிவுரை வழங்கினார்.

கோவை மருதமலை அடிவாரம் எல்லம்மன் மண்டபத்தில் பழங்குடியின மக்களுக்கான மன முன்னேற்ற பயிற்சி மற்றும் மகளிர் சுய உதவp குழுவினருக்கு உளவியல் ஆலோசனை முகாம் நடைபெற்றது.

இம்முகாமை ஆலயம் நலவாழ்வு அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

மலைவாழ் மக்கள் வறுமை நிலை மாற கடுமையாக உழைக்க வேண்டும். கல்வி கற்று வாழ்க்கையில் மேம்பாடு அடைய வேண்டும். தங்களுக்கான இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பை தவற விடக்கூடாது. மகளிர் சுய உதவி குழு பெண்கள் குடும்ப முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். டி.வி. பெண்களின் மனதையும், செயல்பாடுகளையும் மாற்றி வருகிறது. டி.வி. பார்ப்பதில் அதிக ஆர்வம் ெகாண்டு குடும்பத்தினரை கவனிப்பதில் அலட்சியம் காட்டக்கூடாது. பெண்கள் தங்களது மனதை திடமாக சலனம் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

யோகா, தியானம் மூலமாக கோபம், விரக்தி, மன உளைச்சலை தவிர்க்க முடியும். யோகா பயிற்சி உடலை, மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. யோகா பயிற்சி பெற்றவரால் எந்த சூழலையும் பிரச்சினையையும் தாங்கும் வல்லமை கொண்டவராக இருக்க முடியும். தேவையில்லாத விவகாரத்தில் தலையிடுவது, அடுத்தவர் பிரச்சினையில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றை பெண்கள் தவிர்க்க வேண்டும். குடும்ப முன்னேற்றம், குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப சூழல் அமைதியாக இருந்தால் நிம்மதியாக வாH முடியும்.

இவ்வாறு டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் பேசினார்.