மதுரை

மதுரை மேனேந்தலில் ரூ.80 லட்சத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்

மதுரை

மதுரை மாநகராட்சி மேனேந்தல் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் மேனேந்தல் பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை திறந்து வைத்தார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுப் பகுதிகளில் உள்ள வீடுகளில் சேரும் திடக்கழிவுகள் வீடு வீடாக முதல் கட்டமாக டிரை சைக்கிள் மூலம் சேகரிப்பு செய்யப்பட்டு பின்னர் இரண்டாம் கட்ட சேகரிப்பாக காம்பேக்டர் மற்றும் டம்பர் பிளேசர் மூலம் வெள்ளைக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை எளிதாக்கும் வகையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் படி, வார்டுப் பகுதிகளில் திடக்கழிவுகளை சேகரித்து உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 23 மையங்கள் ரூ.19 கோடி மதிப்பீட்டிலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 18 மையங்கள் ரூ.14.50 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 41 மையங்கள் ரூ.23.50 கோடி மதிப்பீட்டில் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 25 மையங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மையத்தில் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கப்பட உள்ளது. அவற்றில் தத்தனேரி பகுதியில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடk; கடந்த 31.10.2019 அன்று திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் மேனேந்தல் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில் 10 தொட்டிகள் அமைக்கப்பட்டு மக்கும் கழிவுகs; நாள் ஒன்றுக்கு ஐந்து டன் வீதம் பெறப்பட்டு உராமாக்கம் செய்யப்பட உள்ளது. இம்மையத்திற்கு மேனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாக சென்று கழிவுகளை தரம் பிரித்து பேட்டரி வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் மூலமாக பெறப்பட உள்ளது. மேற்படி தரம் பிரிக்கும் திட்டமானது விரைவில் அனைத்துப் வார்டு பகுதிகளிலும் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. இந்நடவடிக்கை மூலம் மதுரை மாநகர் குப்பைத் தொட்டியில்லா நகரமாக மாற்றப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, நகரப்பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் (பொ) வினோத்ராஜா, உதவி ஆணையாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் ராஜ் கண்ணன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.