கோவை

கோவை மாவட்ட வாலிபால் போட்டி – வடவள்ளி ஆலயம் அணிக்கு முதல் பரிசு

கோவை 

கோவை மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் வடவள்ளி ஆலயம் அணி முதல் பரிசு பெற்றது. கோவை கவுண்டம்பாளையம் அரசு ஐடிஐ வளாகத்தில் 32 அணிகள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வடவள்ளி ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளையின் மூலம் செயல்படும் ஆலயம் வாலிபால் அணி மூன்றுக்கு இரண்டு என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை வென்றது.

கோவை மாவட்டம் வடவள்ளியில் இளைஞர்களின் மேம்பாட்டுக்காக அவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கவும் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வரவும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் வடவள்ளியை சுற்றியுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் வைத்து ஒரு வாலிபால் அணியை உருவாக்கியது.

பின்னர் அந்த வீரர்களுக்கு முறையான பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி வழங்கப்பட்டது. வீரர்கள் தினமும் காலை மாலை என்று கடுமையான பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கு ஆலயம் வெல்பேர் டிரஸ்ட் அனைத்து உபகரணங்களும் அனைத்து உதவிகளும் செய்து கொடுத்து வீரர்களை ஊக்குவித்தது. இதையடுத்து கோவை மாவட்டத்திலேயே ஒரு சிறந்த வாலிபால் அணியாக வடவள்ளி ஆலயம் அணி உருவாகியுள்ளது.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளயைம் அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. 23 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை அணியும் பங்கேற்றது. இறுதி போட்டியில் ஆலயம் அணியும், யங்க் ஸ்டார் அணியும் மோதின. இதில் மூன்றுக்கு இரண்டு என்ற செட் கணக்கில் ஆலயம் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.