சிறப்பு செய்திகள்

மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்வார்கள் – முதலமைச்சர் பேட்டி

சேலம்

மேயர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள் என்றும், மறைமுகமாக தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வாகனத் தணிக்கையின்போது காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது.

கட்சி கொடிக்கம்பங்களை நடக்கூடாது என்று எந்த உத்தரவும் இல்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு. இதில் அரசுக்கு தொடர்பு இல்லை. தேர்தலுக்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால் விருப்ப மனு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநகராட்சி மேயர்களை பொதுமக்களே நேரடியாக தேர்ந்தெடுப்பார்கள். மன்ற உறுப்பினர்கள் மூலமாக தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.