தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் சரித்திர சாதனை விளக்க மாபெரும் தொடர் ‘ஜோதி நடைபயணம் : அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்

மதுரை

கழக அம்மா பேரவை சார்பில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் முதலமைச்சரின் சரித்திர சாதனைகளை விளக்குகின்ற மாபெரும் தொடர் ஜோதி நடைபயண தொடக்க விழா அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஜோதி ஓட்டத்தை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க அம்மா அவர்களின் அரசை தலைமை தாங்கி நடத்தி பல்வேறு சரித்திர சாதனை செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடியாரின் சரித்திர சாதனைகளை தமிழகம் முழுவதும் எடுத்துக்கூறும் வண்ணம் மாபெரும் தொடர் ஜோதி நடைபயணத்தை நடத்த கழக அம்மா பேரவை ஏற்பாடு செய்துள்ளது. முதல்கட்டமாக மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் நடத்துகிறது. இதன் தொடக்க விழா மதுரை வேலம்மாள் ஐடா ஸ்கட்டர் அரங்கத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய் பேரிடர், மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அம்மா பேரவை நிர்வாகிகள் ஆர்.இளங்கோவன், கே.தமிழரசன். எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ, என்.சதன்பிரபாகர் எம்.எல்.ஏ. எம்.இளங்கோவன், பா.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.ராமசாமி, மகாலிங்கம், விஜயன், நெடுமாறன், பாலசுப்பிரமணி, பிச்சைராஜன், ராஜா, பூமா ராஜா, வாசிமலை, செல்லப்பாண்டி, நிலையூர் முருகன், ரவிச்சந்திரன், அண்ணாநகர் முருகன், கே.முருகேசன், துதி.திருநாவுக்கரசு ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

கழக அரசின் சாதனை விளக்க தொடர் ஜோதி நடைபயணத்தை கழக அமைப்பு செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் பா.நீதிபதி, கே.மாணிக்கம், பெரியபுள்ளான் (எ) செல்வம், கழக அமைப்பு செயலாளர் ம.முத்துராமலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் க.தவசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ராஜாங்கம், கழக அம்மா பேரவை நிர்வாகிகள் கே.ஏ.கே.முகில், செவ்வை.சம்பத்குமார், சீனிவாசன், ரமேஷ், மூவேந்தன், பாலகுமார், ராஜசேகர் மற்றும் நவநீத கிருஷ்ணன், அய்யப்பன், திருப்பதி, வக்கீல் ரமேஷ், ரா.முத்துகுமார், ஓம்.கே.சந்திரன், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த தொடர் ஜோதி நடைபயணம் வருகிற 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மாபெரும் வெற்றி சரித்திரத்தை உருவாக்கும் வகையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் நல்வாழ்த்துகளோடு முதலமைச்சரின் சரித்திர சாதனைகளை மக்களுக்கு எடுத்து கூறும் வண்ணம் மாபெரும் தொடர் ஜோதி நடைபயணம் சிறப்பாக துவங்கியுள்ளது. இந்த தொடர் ஜோதி நடைபயணம் ஏற்கனவே கடந்த மாதம் 29-ந் தேதி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் பல்வேறு பொய் பிரச்சாரம் செய்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கின்றன. இவர்களுக்கு பாடம் புகட்டும் வண்ணம் இந்த பிரச்சாரம் அமையும். மதுரை மாவட்டத்தில் 30 லட்சம் பேர் உள்ளனர். இதில் 25 லடசம் பேர் வாக்காளர்கள். இந்த மக்களிடம் நமது சாதனையை எடுத்து கூற வேண்டும், இந்த ஜோதி நடைபயணம் தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களுக்கும் ஒளி ஏற்றக்கூடிய ஜோதியாகும்.

இன்றைக்கு எதிர்க்கட்சிகள் இந்த அரசு என்ன சாதனை செய்தது என்று கேள்வி கேட்டு நாம் செய்கின்ற சாதனையை மறைக்க பார்கின்றனர், இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. இதில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கும் முதலாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. பிரதமரும், சீன நாட்டு அதிபரும், இருநாட்டின் நல்லுறவு பற்றி பேச தமிழகத்தை தான் தேர்வு செய்தார்கள். இருநாட்டு தலைவர்களும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வெட்ட வெளியில் அமர்ந்து பேசும் வகையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இது முதலமைச்சரின் ஆளுமைத்திறனுக்கு எடுத்துக்காட்டு என்பதை ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாது பாரத பிரதமரும், சீன தேசத்து அதிபரும் முதலமைச்சரை பாராட்டி உள்ளனர். மாநிலம் விட்டு மாநிலங்கள் பாராட்டி வந்த நிலையில் தற்போது கண்டம் விட்டு கண்டம் பாராட்டுக்களை நமது முதலமைச்சர் பெற்று வருகிறார். காவேரி பிரச்சினையில் மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி அதன் மூலம் ஆணையம் அமைத்து தீர்வு கண்டுள்ளார். அம்மாவின் கனவுத் திட்டங்களை எல்லாம் சத்தமில்லாமல் நிறைவேற்றி வருகிறார்.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 26000 கண்மாய்களும், உள்ளாட்சித்துறையில் உள்ள 14000 கண்மாய்களும் என மொத்தம் 40000 கண்மாய்கள், படிப்படியாக தூர்வாரப்பட்டு வருகிறது. இதன்மூலம் கண்மாய்களில் நீர் நிரம்பி உள்ளது. சென்னையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டதில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இது சரித்திர சாதனை இல்லையா?

காவல்துறையில் கட்டப் பஞ்சாயத்து கிடையாது, சட்டம்- ஒழுங்கு பேணி காக்கப்பட்டு வருகிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அண்ணா கூறுவார். அதனடிப்படையில் இந்த அரசின் ஆளுமைக்கு கிடைத்த வரவேற்பால் இரண்டு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் நமக்கு மகத்தான வெற்றியை மக்கள் பரிசாக அளித்துள்ளனர்.

இன்றைக்கு ஆளுமை மிக்க தலைவராகவும், கருணையின் உருவமாகவும், உண்மைக்கு எடுத்துக்காட்டாகவும் முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார், துறைதோறும் சாதனைகளாக செய்து வருகிறார். மின் தட்டுப்பாடே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளார். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்கள் மனதை வென்றுள்ளார்கள். சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியில் 48 நாட்களில் 1 கோடி பேர் தரிசனம் செய்துள்ளனர். எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. திருப்பதி கோயிலில் எல்லா வசதி இருந்தும் ஒருநாளைக்கு 75 ஆயிரம் பேர்தான் தரிசனம் செய்ய முடியும்.

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமினை சேலத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இதுவரை 10 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் முதலமைச்சர் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் தாலுகா வாரியாக குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மதுரை மாவட்டத்தில் இந்த தொடர் ஜோதி நடைபயணம் மூலம் 10 தொகுதிகளிலும் முதலமைச்சர் குறைதீர்க்கும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.இந்த தொடர் ஜோதி நடைபயணத்தின் மூலம் கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை பெற்றுத்தர இளைஞர் பட்டாளம் சூளுரை ஏற்பது மட்டுமல்லாது, அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கும் இது பிரச்சார களமாக அமையும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது :-

முதலமைச்சர் மக்கள் குறைதீர்க்கும் முகாமினை 234 தொகுதிகளிலும் துவக்கி உள்ளார். இதன் மூலம் முதியோர் உதவித்தொகை, பட்டா, போன்றவை உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு பின்னால் கழக ஆட்சியை நிலை நிறுத்த முடியுமா என்ற பேச்சு இருந்தது, ஆனால் இன்றைக்கு மூன்று வருடம் கட்டுக்கோப்பாக ஆட்சியையும், கட்சியையும், முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இது சிறந்த ஆளுமை இல்லையா?

சில நடிகர்கள் வந்தவுடன் ஆளுமை இல்லையா என்று கேள்வி கேட்கின்றனர். ஆனால் ஆளுமை மிக்கவர்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று மக்களே பாராட்டி வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் பல பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தார், 38 இடங்களில் வென்ற தி.மு.க. வாய்ஜாலம் எடுபடவில்லை. மக்களே சரியாக புரிந்து கொண்டு விட்டனர். அதன்பின் நடைபெற்ற மூன்று தொகுதிகளில் கழகம் வென்றது, அதன்பின் நடைபெற்ற நாங்குநேரி, மற்றும் விக்கிரவாண்டி தேர்தலில் மிகபெரிய வெற்றியை மக்கள் தந்தார்கள்.

ஆனால் ஸ்டாலின் இந்த தோல்விக்கு பொறுப்பேற்கிறோம் என்று கூறினார். சிலநாள் கழித்து பணநாயகம் வென்று விட்டது என்று கூறினார். ஆனால் தி.மு.க.வும், காங்கிரஸ் தான் ஓட்டுக்கு 1000 ரூபாய் பணம் கொடுத்தது. இந்த தேர்தலில் ஜனநாயகம் வென்றுவிட்டது என்று ஸ்டாலினுக்கு சவால் விட்டு கூறுகிறேன்.துரைமுருகன், ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்று கூறுகிறார்.

தி.மு.க.வில் தனது அண்ணன் மு.க.அழகிரியை துரத்திவிட்டு அன்பழகன் இருக்கும் போதே அவரது பதவியை எடுத்துக்கொண்டு செயல்படுவது ஆளுமைமிக்க தலைவரா? ஆளுமைமிக்க தலைவர் என்பது மக்கள் கூற வேண்டும். வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி தி.மு.க.வை டெபாசிட் இழக்கச்செய்து கழகத்திற்கு மாபெரும் வெற்றியை நீங்கள் தேடித்தர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.