தற்போதைய செய்திகள்

முதல்வரின் சாதனை விளக்க தொடர் ஜோதி நடைபயணத்துக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

மதுரை

மதுரையில் கழக அம்மா பேரவை சார்பில் முதலமைச்சரின் சாதனை விளக்க தொடர் ஜோதி நடைபயணம் நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அலை கடலென திரண்ட அம்மா பேரவை தொண்டர்கள் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறினர்.அப்போது அவர்கள் வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் ஓட்டு இரட்டை இலை சின்னத்திற்கே என்று உறுதி அளித்தனர்.

கழக அம்மா பேரவை சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆணைக்கிணங்க அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி பல்வேறு சரித்திர சாதனைகள் படைத்து வரும் முதலமைச்சரின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் மாபெரும் தொடர் ஜோதி நடைபயணம் மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது.

கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வேலம்மாள் ஐடாஸ் கட்டரிலிருந்து நடைபயணம் புறப்பட்டது. அங்கிருந்து விரகனூர், தெப்பக்குளம், அண்ணாநகர், சுந்தரம் பார்க், வழியாக உத்தங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. அங்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மரக்கன்றுகளை நட்டு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நூல்களை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடைபயணம் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ஒத்தக்கடை பகுதியை அடைந்தது. அங்கு நடைபெற்ற முதலமைச்சர் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 548 நபர்களுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் நடைபயணத்தில் அணிவகுத்த தொண்டர்கள் சிட்டம்பட்டி, தெற்குத்தெரு, விநாயகர்புரம், மேலூர் ஆகிய பகுதிகளில் ஜோதியை ஏந்தியபடி கழக அரசின் சாதனைகள் மக்களிடம் எடுத்து கூறினர்.

அதனை தொடர்ந்து மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நட்டு, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலூர் தாலுகா அலுவலகம் அருகே முதலமைச்சர் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 637 பனயாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதன் பின் செட்டியார்பட்டி பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு மாணவர்களுக்கு நூல்கள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அழகர்கோவில் பகுதியில் முதலமைச்சரின் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 364 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதலமைச்சரின் சரித்திர சாதனை விளக்க தொடர் ஜோதி நடைபயணத்துக்கு வழியெங்கும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்த போது மக்கள் அம்மாவின் வழியில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். ஆனால் திமுக ஆட்சியில் இதுபோன்று எந்த திட்டமும் செய்யவில்லை, தேர்தல் காலங்களில் பல்வேறு பொய் பிரச்சாரத்தை தான் ஸ்டாலின் செய்வார். அதை நாங்கள் இனிமேல் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வரும் உள்ளாட்சித்தேர்தலில் எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என்று உறுதியளித்தனர்.

பின்னர் கூடியிருந்த மக்கள் மத்தியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் புனித அரசை தலைமை தாங்கி நடத்தி வரும் சாமானிய மக்களின் முதலமைச்சரின் சரித்திர சாதனைகளை கழக அம்மா பேரவையின் சார்பில் எடுத்துரைக்கும் ஒரு புனித பணி தான் இந்த நடைபயணம். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பல்வேறு பொய் பிரச்சாரங்களை பரப்பி வருகிறார். முதலமைச்சர் செய்து வரும், சாதனை திட்டங்களையெல்லாம் ஸ்டாலின் கண்ணெடுத்து பார்க்க வேண்டும், காது கொடுத்து கேட்க வேண்டும். இதயத்தை திறந்து வைத்து அவர் மனசாட்சியை கேட்க வேண்டும். அப்படி அவர் செய்தால் இந்த அரசை அவரே பாராட்டி விடுவார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆணைப்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களை சந்தித்து, கழக அரசின் சாதனகளை எடுத்துரைப்பது தான் எங்கள் லட்சியம் ஆகும்.

அது மட்டுமல்லாது முதலமைச்சர் குறைதீர்க்கும் முகாமை தொடங்கி இதுவரை 10 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, மாபெரும் சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர். இது போன்று திமுக ஆட்சியில் செய்தது உண்டா? என்று ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும். முதலமைச்சரின் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு முதல்கட்டமாக சேலத்தில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு என்று பேரறிஞர் அண்ணா கூறுவார். அதனை நனவாக்கும் வண்ணம், முதலமைச்சர் மக்களுக்கு தொண்டு செய்து வருகிறார். அது மட்டுமல்லாது எங்களையும், இது போன்ற புனித பணியினை மேற் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இது போன்ற திட்டங்களின் மூலம், மக்களின் மனதை முதலமைச்சர் குளிர வைத்துள்ளார். அதனால் தான் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றியை மக்கள் பரிசாக தந்திருக்கிறார்கள். விரைவில் வரும் உள்ளாட்சித் தேர்தல்களிலும், நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றியை தர தயாராக உள்ளனர்.
சில நடிகர்கள் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர்.

இதற்கு சரியான பதிலடியை முதலமைச்சர் கொடுத்து விட்டார். மக்களை பாதுகாக்கின்ற ஆளுமை, மக்களின் தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றும் ஆளுமை, மக்களின் நம்பிக்கைக்குரிய ஆளுமை ஆகிய அனைத்து தகுதிகளையும் பெற்றவர் முதலமைச்சர். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை. தமிழகத்தை வெற்றியின் இடமாக முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.

ஏற்கனவே முதலமைச்சர் திருக்கரங்களால் இந்த தொடர் ஜோதி நடைபயணம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்துள்ளனர். நிச்சயம் உள்ளாட்சித்தேர்தல் மட்டுமல்லாது சட்டமன்ற தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.