தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு முடிவு கட்டும் தேர்தலாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமையும் – அமைச்சர் பா.பென்ஜமின் நம்பிக்கை

திருவள்ளூர்

தி.மு.க.வுக்கு முடிவு கட்டும் தேர்தலாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமையும் என்று அமைச்சர் பா.பென்ஜமின் நம்பிக்கை தெரிவித்தார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் பாடியநல்லூரில் மாவட்ட அவைத்தலைவர் காசு ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும் அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், முன்னாள் எம்.பி. டாக்டர் வேணுகோபால், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-

நமது இயக்கத்தை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று பகல் கனவு கண்டவர்களின் கனவை சுக்கு நூறாக்கும் வகையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மக்கள் நமக்கு மகத்தான வெற்றியை தந்தனர். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம். இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் கழகம் தொடர்ந்து வெற்றி பெறும்.கட்சிக்கு செய்யும் துரோகம் பெற்ற தாய்க்கு செய்யும் துரோகத்துக்கு சமம். எனவே உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் ஒருவருக்கொருவர் வீட்டுக் கொடுத்து வெற்றி பெற வேண்டும். திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 61 வார்டுகளிலும் நமது வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். தி.மு.கவுக்கு முடிவு கட்டும் தேர்தலாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமையும். அ தற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இக்கூட்டத்தில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஜி.கே.இன்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், சக்குபாய், கழக நிர்வாகிகள் ஈசி சேகர், புழல் ஜெயபால், சிவில் முருகேசன், என்.சி.சூர்யா, மாவட்ட துணை செயலாளர் மாதவரம் டி.தட்சிணாமூர்த்தி, மாவட்ட இணை செயலாளர் ராஜேஸ்வரி, மனோகரன், சுந்தர், உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழக செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ, செய்திருந்தார்.