சிறப்பு செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினர் இரண்டு நாட்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம்

சென்னை

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினர் விருப்ப மனுக்களை பெற தனித்தனியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 5 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் 5 இடங்களில் விருப்பமனு பெறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலை அடுத்த மாதம் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. எனவே கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்பும் கழக உடன் பிறப்புகள் ஒவ்ெவாரு பதவிக்கும் உரிய கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்று ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி இன்றும், நாளையும் அனைத்து மாவட்டங்களிலும் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.

மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகரமன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2500-ம், பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1500-ம், ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.3 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கழகத்தின் சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும். எனவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினர் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம்.